இலங்­கை­யி­லுள்ள தமி­ழக மீன­வர்­களை விடு­விக்கக் கோரி போராட்டம் !

0
150

03OCTTH_FISHING_BO_1226814fஇலங்கை சிறையில் உள்ள தமி­ழக மீன­வர்­களை விடு­விக்கக் கோரி இரா­மேஸ் ­வரம் மீன­வர்கள் நேற்று முதல் கால­வ­ரை­யற்ற வேலை நிறுத்­தத்தை தொடங்­கி­யுள்­ளனர்.
இரா­ம­நா­த­புரம், புதுக்­கோட்டை, நாகை ஆகிய பகு­தி­களில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமி­ழக மீன­வர்­களை இலங்கை கடற்­ப­டை­யினர் மீன் பிடிக்க விடாமல் தொடர்ந்து தடுத்து நிறுத்தி விரட்டி அடிக்­கின்­றனர்.
இதனால் தமி­ழக மீன­வர்­களின் மீன்பிடி தொழில் முற்­றிலும் நலி­வ­டைந்து தற்­போது மீன் பிடிக்க முடி­யாத அவலநிலை ஏற்­பட்­டுள்­ளது. அது மட்டும் இல்­லாமல் இரா­மேஸ்­வ­ரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் தமி­ழக மீன­வர்­களை கச்­ச­தீவு பகு­தியில் மீன் பிடிக்க முடி­யாத அள­வுக்கு
இலங்கை கடற்­ப­டை­யினர் தொடர்
தாக்­கு­தலை நடத்தி வரு­கின்­றனர். இது­வரை தமி­ழக மீன­வர்கள் 73 பேரையும், மேலும் அவர்­க­ளுக்கு சொந்­த­மான 100-க்கு மேற்­பட்ட பட­கு­களையும் இலங்கை கடற்­ப­டை­யினர் சிறைப்­பி­டித்து வைத்­துள்­ளனர். இதனையடுத்து இரா­மேஸ்­வரம் மீன­வர்கள் இதனைக் கண்­டித்து அவ­சர ஆலோ­சனை கூட்­டம் நடத்தினர். இதில் இலங்கை கடற்­ப­டையால் சிறை பிடிக்­கப்­பட்ட 73 மீனவர்களையும், பட­கு­க­ளையும் விடு­விக்கும் வரை கால­வ­ரை­யற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறி­வித்­தனர்.
இந்த வேலை நிறுத்­தப்­போ­ராட்டம் நேற்று தொடங்­கி­யுள்­ளது. அதில் 800-க்கும் மேற்­பட்ட விசைப்­ப­ட­குகள் கட­லுக்கு செல்
லாமல் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. இத னால் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here