சர்வதேச பங்களிப்பை தட்டிக் கழிக்க முடியாது -பிரிட்டன்

0
167

10837இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூறும் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கான துணை அமைச்சர் ஹியூகோ சுவயர் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நிராகரித்தமை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் அளித்த போதே துணை அமைச்சர் ஹியூகோ சுவயர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிபதிகள் உள்ளடக் கப்பட வேண்டும் என்ற விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹீசைன் ஊடாக அரசாங்கத்துக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தக் குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஹியூகோ சுவயர், எந்தவொரு பொறுப்புக்கூறல் பொறிமுறையும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையிலும் அமைய வேண்டும் என்பதில் பிரித்தானிய அரசாங்கம் தெளிவாக உள்ளதாக கூறியுள்ளார்.

இதன்பிரகாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனு சரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தீர் மானத்தில் வழங்கிய உறுதி மொழிகளை முழுமையாக நிறைவேற்றுமாறு ஜெனிவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியதாக பிரித்தானிய துணை அமைச்சர் ஹியூகோ சுவயர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போர்க்குற்றச்சாட்டுக் கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச பங்களிப்புடன் தீர்வொன்றை பெற்றுக் கொள்ளாமல் நல்லிணக்க முயற்சிகளில் இலங்கை பூரணமாக வெற்றியடைய முடியாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here