வடமாகாணத்தில் கடந்த 6 மாதங்களுக்குள் பொதுமக்களால் பொலிஸாருக்கு எதிராக 15 முறைப் பாடுகள் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதில் 10 முறைப்பாடுகள் யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸாருக்கு எதிராகவே பொதுமக்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் கடந்த 6 மாதங்களுக்குள் பொதுமக்களால் பொலிஸாருக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளில் அசமந்த போக்கில் இருந்ததாக 10 முறைப்பாடுகளும் அதிகார துஷ்பிரயோகம் செய்த
தாக 4 முறைப்பாடுகளும், ஏனைய வகையில் ஒரு முறைப்பாடும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாருக்கு எதிராக 3 முறைப்பாடுகளும், வல்வெட்டித்துறை பொலிஸ்நிலைய பொலிஸாருக்கு எதரிராக 2 முறைப்பாடுகளும், பருத்தித்துறை பொலிஸ்நிலைய பொலிஸாருக்கு எதரிராக 2 முறைப்பாடுகளும், வட்டுக்கோட்டை பொலிஸ்நிலைய பொலிஸாருக்கு எதரிராக 2 முறைப்பாடுகளும், வவுனியா பொலிஸ்நிலைய பொலிஸார்,மானிப்பாய் பொலிஸ்நிலைய பொலிஸார், தெல்லிப்பளை பொலிஸ்நிலைய பொலிஸார், கனகராயன்குள பொலிஸ்நிலைய பொலிஸார், யாழ்ப்பாண பொலிஸ்நிலைய பொலிஸார், அச்சுவேலி பொலிஸ்நிலைய பொலிஸார் ஆகியோருக்கு எதிராக தலா ஒரு முறைப்படுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகளில் 7 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டும் ஏனைய 8 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போன்று கடந்த 2015 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் பொலிஸாருக்கு தெரிராக 19 முறைப்பாடுகள் பொதுமக்களால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.