41 ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் : வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை!

0
315

Arab-Media-Cartoonகடந்த காலங்களில் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன 41 ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்க வேண்டும் என வடபகுதி ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன், திருகோணமலையில் கொல்லப்பட்ட நடேசன் மற்றும் கொழும்பில் கொல்லப்பட்ட தராக்கி சிவராம் ஆகியோருடைய விசாரணைகளையாவது முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.

வடக்கு தெற்கு ஊடகவியலாளர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடபகுதியிலுள்ள ஊடகவியலாளர்கள் குழுவொன்று தென்பகுதி வந்துள்ளது. இந்தக் குழுவினர் நேற்றையதினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்திப்பின் போது வடபகுதி ஊடகவியலாளர்கள் சார்பில் உரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் தயாபரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தொழில் ரீதியான பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதுடன், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ப்ரெடி கமகே மீதான தாக்குதல் உள்ளிட்ட ஐந்தாறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எதிர்காலத்தில் இவை மேலெழும்பாதவாறு கட்டுப்படுத்துமாறும் வடபகுதி ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here