சங்கரத்தையில் வெட்டுக்காயத்துடன் கிணற்றில் சடலம்!

0
291
??????????????????????????????????????????????????????????
கழுத்தில் வெட்டுக்காயத்துடன் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சங்கரத்தை தேவாலய வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து நேற்றிரவு 9 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க அறுக்காஞ்சி ராசன் என்ற குடும்பஸ்தர் என உறவினர்களால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here