பிரான்சு பாரிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!

0
1320

பூஊ
DSCN4127DSCN4222DSCN4196
DSCN4215பிரான்சு பாரிசில் கரும்புலிகள் நாள் 2016 பாரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகச்சுடரை 1999 ஆம் ஆண்டு கொக்குத் தொடுவாயில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் கலைமகளின் சகோதரியும் 1989 இல் வீரச்சாவடைந்த கப்டன் ரூபனின் சகோதரியும் 1994 பருத்தித்துறையில் வீரச்சாவடைந்த கடற்புலி வீரவேங்கை சுதாயினியின் சகோதரியும் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.DSCN4154
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தீபம் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
இதனையடுத்து சோதியா தமிழ் கலைக்கல்லூரி, செவ்ரோன் தமிழ்ச்சோலை, பரிஸ் 13 தமிழ்ச்சோலை மாணவிகளின் கரும்புலிகள்நினைவு சுமந்த எழுச்சி நடனங்கள், மற்றும் தமிழ்ச்சோலை மாணவிகளின் கரும்புலி நினைவு சுமந்த பாடல்கள் என்பனவும் இடம்பெற்றன.
நிகழ்வில் சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றினர்.

DSCN4136
அவர்தனது உரையில், தடைநீக்கிகளான கரும்புலிகளின் ஈகம்பற்றிய சிறப்புக்களை எடுத்துவிளக்கியிருந்தார். இவ்வாறான நிகழ்வுகள் நினைவுகூருவதற்காக மட்டுமல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து உறுதி எடுத்துக்கொள்ளும் களமாக இருப்பதற்காகவுமே என்று கூறிய அவர், எமது போராட்டமானது தமிழீழத் தேசியத் தலைவர் கூறியதுபோல புலம்பெயர் தேசத்து இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்கப்படவேண்டும். அந்த இளைஞர்களை சட்டதிட்டங்களுக்கு அமைவாக அனைவரும் வழிகாட்டி கொண்டு செல்லவேண்டியது அனைவரின் கடமை எனவும் அருமையாக எடுத்துரைத்திருந்தார்.

DSCN4178
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
ஊடகப்பிரிவு -பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

https://youtu.be/QKhClfYdcg4

DSCN4120DSCN4146DSCN4202DSCN4206DSCN4199DSCN4172DSCN4228DSCN4185
DSCN4158DSCN4145DSCN4140DSCN4150DSCN4163DSCN4160


DSCN4148DSCN4129DSCN4132

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here