தமிழ்ச்சோலை தலைமைப்பணியகமும் – தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து தமிழர் விளையாட்டுத் துறையின் ஆதரவுடன் நடாத்திய இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டி 2016 கடந்த 02.07.2016 சனிக்கிழமை சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்ச்சோலை மாணவ மாணவியர்களின் முழவு இசை அணிவகுப்புடன் விருந்தினர்கள் வரவேற்று மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர் அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கிருபா அவர்கள் ஏற்றி வைத்தார.; தேசியக் கொடியேற்றலில் பிரஞ்சுக்கொடியை சார்சல் மாநகர முதல்வரும் இன்றைய போட்டியின் பிரதம விருந்தினருமாகிய மதிப்புக்குரிய பிறெஞ்செஸ் புப்போனி அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத்தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர் பாலசுந்தரம் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார்.
தொடர்ந்து ஈகைச்சுடரினை 30.07.1991 அன்று அனையிறவில் வீரச்சாவடைந்த லெப்.தாசனின் சகோதரன் அவர்கள் ஏற்றி வைத்து மலர் வணக்கத்தையும் செய்திருந்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை தலைமைப்பணியகக் கொடியேற்றல் இடம்பெற்றது. தமிழ்ச்சோலைக் கீதமிசைக்க தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு.க.nஐயகுமாரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் கொடியினை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. ப . பாலகுமரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து இல்லங்களின் கொடியேற்றல் (சமநேரத்தில்) இல்லப் பொறுப்பாளர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. ராதா இல்லம்(மஞ்சள்), மாலதி இல்லம் ( செம்மஞ்சள் ), சோதியா இல்லம் ( சிகப்பு ) , அங்கையற்கண்ணி இல்லம் ( நீலம் ), ஜெயந்தன் இல்லம் (ஊதா நிறம்), சார்ல்ஸ் அன்ரனி இல்லம் ( பச்சை நிறம் ) ஆகிய இல்லங்களிடையே போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து ஒலிம்பிக்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. ஆரம்ப சுடரினை பிரான்சு தமிழர் மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இ.இராஐலிங்கம் அவர்கள் வேட்டுடன் ஆரம்பித்து வைக்க அதனை 2015 ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரனாக தெரிவு செய்யப்பட்ட செல்வன் தவராஜா சஞ்ஜித், 2015 ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீராங்கனை செல்வி சோபியா சோதிராசா அவர்களும் பெற்றுக் கொண்டு மைதானத்தை சுற்றிவரவுள்ள இல்ல வீரர்களிடம் கையளித்து அனைத்து வீரர்களுடன் தீப ஒலித்திடலில் சங்கமிக்கப்பட்டு உறுதிப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
உறுதிப்பிரமாணத்தைத் தொடர்ந்து பிரதமவிருந்தினர் சார்சல் மாநகர முதல்வர் ஆரம்ப உரைநிகழ்த்தினார். சிறப்புவிருந்தினராக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களும் கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்புகள் இடம்பெற்றன. அணிவகுப்பு மரியாதையை பிரமுகர்கள் ஏற்றுக்கொண்டனர். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை முழவு இசை அணியினர் தலைமை தாங்கிச் செல்ல ஒவ்வொரு இல்லங்களும் தங்களுக்குரிய இல்ல நிறங்களில் வெளிகாட்டியிருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
போட்டிகள் யாவும் திட்டமிட்டபடி போட்டி நடாத்துனர்களால் நடாத்தப்பட்டது. போட்டியாளர்கள் மிகவும் உற்சாகமாக பங்கு கொண்டதோடு தமது வெளிப்பாடுகளை மைதானத்தில் வெளிப்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு இல்லங்களும் தமது இல்லங்களை அழகாக அலங்காரம் செய்ததோடு தாயக உணவுகளையும் வழங்கி தமிழர் பண்பாட்டுடன் உபசரித்திருந்தார்கள்.
விநோதவுடைப்போட்டிகளிலும் தமிழர்கள் கலைகலாச்சாரத்தையும், தமிழர் கல்வியின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும், தாயகத்தை பிரதிபலிக்கும் வகையிலும், தாயகத்தில் இன்று நாளாந்தம் நடைபெறுகின்ற விடயங்களை நடிப்பின் மூலமாகவும், அலங்காரங்கள் மூலமாகவும் வெளிக்காட்டியிருந்தனர். இவர்களிடம் நடுவர்களால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு அவர்களும் துடுப்பாக சரியான பதில்களை வழங்கியிருந்தமை அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது.
பார்வையாளர்களுக்கான, கட்டமைப்புகளுக்கிடையேயான கயிறுத்தல் போட்டிகள், குழந்தைகளுக்கான போட்டிகளும் இடம்பெற்றிருந்தது.
இல்ல அலங்காரத்தில் முதலாவது சார்ல்ஸ், இரண்டாவது மாலதி, மூன்றாவது அங்கயற்கண்ணி பெற்றுக்கொண்டன.
இந்த ஆண்டுக்கான சிறந்த வீரனாக பாலேந்திரன் பானுயன் (ராதா இல்லம்) அவர்களும் சிறந்த வீராங்கனையாக சோதிராசா சோபனா (ராதா இல்லம்) அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கும், இல்லங்களுக்கும் வெற்றிக்கிண்ணங்களை முக்கியஸ்தர்கள் வழங்கி மதிப்பளித்திருந்தனர். 1 வது இடத்தை சார்ல்ஸ் அன்ரனி ( 536.5) இல்லமும், 2 வது இடத்தை ராதா இல்லமும் (472,5), 3 வது இடத்தை ஜெயந்தன் இல்லமும் (336) பெற்றுக்கொண்டன.
வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கும், இல்லங்களுக்கும் வெற்றிக்கிண்ணங்களை முக்கியஸ்தர்கள் வழங்கி மதிப்பளித்திருந்தனர். 1 வது இடத்தை சார்ல்ஸ் அன்ரனி ( 536.5) இல்லமும், 2 வது இடத்தை ராதா இல்லமும் (472,5), 3 வது இடத்தை ஜெயந்தன் இல்லமும் (336) பெற்றுக்கொண்டன.
அணிநடை ஆண்கள் பிரிவில் 1 வது இடத்தை சோதியா இல்லமும், 2 வது இடத்தை ராதா இல்லமும், 3 வது இடத்தை சார்ல்ஸ் இல்லமும் பெற்றுக்கொண்டன.
அணிநடை பெண்கள் பிரிவில் 1 வது இடத்தை சோதியா இல்லமும், 2 வது இடத்தை சார்ல்ஸ் இல்லமும், 3 வது இடத்தை ராதா இல்லமும் பெற்றுக்கொண்டன.
இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை முக்கியபிரமுகர்கள் வழங்கி மதிப்பளித்தனர்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணிமனை செயலாளரினால் அனைவருக்கும் நன்றியுரைக்கப்பட்டது.
ரிரிஎன் தொலைக்காட்சி நிகழ்வுகளை படமாக்கியிருந்ததுடன் நிகழ்வுகளை வழமைபோன்று பிரதியாக்கி வழங்கியிருந்தனர். தமிழ் ஊடக மையம், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவினர் நிகழ்வை சிறப்பாக பதிவுசெய்தனர்.
இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து தரப்பில் பரிபூரண ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டிருந்தது.
இல்லக்கொடியிறக்கலுடன் தமிழ்சசங்க தமிழ்ச்சோலை கொடியிறக்கலுடன் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இல்ல விளையாட்டுப்போட்டிகள் இனிதே நிறைவு பெற்றன.
ஊடகப்பிரிவு-பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.