பிரான்சின் முன்னாள் பிரதமர் Michel Rocard மரணம் – தலைவர்கள் அஞ்சலி!

0
278

imageபிரான்சின் சோசலிச கட்சியின் தலைவரும், முன்னார் பிரெஞ்சு பிரதமருமான Michel Rocard (85), சனிக்கழமை (02.07.2016)காலமாகிவிட்டார்.

இடதுசாரி மூத்த தலைவரான அவரின் இழப்புக்கு கட்சி வேறுபாடு இன்றி தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவர் 1977 இல் Conflans-Sainte-Honorine (Yvelines) மாநகர முதல்வராகவும், Francois Mitterrand ஜனாதிபதியாக இருக்கும் போது 1983-1985 விவசாய அமைச்சராகவும் , 1988-1991 பிரதமராகவும் பதவி வகித்தார்.

பின்னர் 1993-1994 வரை பிரான்ஸ் சோஷலிச கட்சியின் முதன்மை செயலாளராக இருந்த Michel Rocard , 1994-2009 வரை ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதியாகவும் இருந்தார்.

மிக திறமையான, தொலைநோக்கு சிந்தனை உள்ள மனிதராக இவர் சித்தரிக்கப்படுகின்றார்.

சனிக்கிழமை (02.07.2016) பரிஸ் மருத்துவமனையில் தனது 85வது வயதில் காலமாகியுள்ளார்.

‘தேசத்தலைவனை இழப்பது மிகப்பெரும் சோகம்!’ என பிரதமர் மனுவல் வால்ஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்து, ‘குடியரசு மற்றும் இடதுசாரிகளின் மிகச்சிறந்த எதிர்காலம்!’ என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தன் வாழ்நாளின் இறுதி நிமிடங்கள் வரை சமூகத்துடன் நெருக்கிய தொடர்பில் இருந்துள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதியாக ஜூன் 23ம் திகதி ஒரு பத்திரிகைக்கு தனது இறுதி செவ்வியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பதவியில் இல்லாத போது தாயகத்தில் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் பிரான்ஸ் அரச உயர் மட்டத்தினருடன் சந்திப்புக்களை மேற்கொள்ள துணையாக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here