- நிரந்தர நியமனம் வழங்கக்கோரி, வவுனியா மாவட்ட தொடருந்து கடவைக் காப்பாளர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர்.
வட பகுதிக்கான தொடருந்து ஆரம்பிக்கப்பட்ட பின்னர், தொடருந்து கடவைகளில் காப்பாளர்களாக கடமையேற்ற தம்மை நிரந்தர நியமனம் செய்ய வேண்டும் எனவும் தமக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரியே, இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வவுனியாவில் உள்ள 75 தொடருந்து கடவை காப்பாளர்கள் ஒன்று திரண்டு, வவுனியா தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வழங்கப்படும் 7500 ரூபா சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமெனவும், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தம்மை சுதந்திரமாக செயற்பட விடவேண்டும் என்றும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
வவுனியா மாவட்ட தொடருந்து கடவை காப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கமும் கலந்துகொண்டிருந்தார்