பக்­க­சார்­பற்ற விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் :ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் வாய்­மூல அறிக்­கை!

0
277

Zeid Ra'ad Zeid al-Hussein, United Nations High Commissioner for Human Rights at the Twenty-Seventh session of the Human Rights Council. 8 September 2014. UN Photo / Jean-Marc Ferré
யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் கொத்­தணிக் குண்­டுகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தற்­போது பல அறிக்­கை­க­ளில் புதிய ஆத­ாரங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சுயா­தீ­ன­மான பக்­க­சார்­பற்ற விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் தனது வாய்­மூல அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
பலாத்­கார கைதுகள் சித்­தி­ர­வ­தைகள், பாலியல் வல்­லு­ற­வுகள், இரா­ணுவ கண்­கா­ணிப்பு போன்­றன தொடர்பில் தொடரும் குற்­றச்­சாட்­டுகள் விரை­வாக விசா­ரிக்­கப்­பட வேண்டும். நீதி விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள், விசா­ரணை­யா­ளர்கள் ஆகி­யோரின் பங்­க­ளிப்பு தொடர்பில் மிக முக்­கி­ய­மான கேள்வி இன்னும் நிலு­வையில் இருக்­கி­றது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
புதிய அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் முன்­னேற்­ற­க­ர­மான வேலைத்­திட்­டங்கள் சில­வற்றை முன்­னெ­டுத்­துள்­ளது. ஆனால் வெளிப்­ப­டைத்­தன்­மை­யின்­மையின் குறை­பாடு, பொறி­முறை தொடர்­பான செயற்­பா­டு­களை குறைத்து மதிப்­பிடச் செய்­கி­றது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இன்று வெளியி­ட­வுள்ள இலங்­கையின் மனித உரிமை நிலைமை குறித்த அறிக்கை நேற்­றைய தினம் மனித உரிமைப் பேர­வையின் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அந்த வாய்­மூல அறிக்­கை­யி­லேயே மேற்­கண்ட விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.
un-security-council
வாய்­மூல அறிக்­கையின் முக்­கிய விட­யங்கள் வரு­மாறு
1.கடந்த வருடம் இலங்கை தொடர்பில் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வாக இலங்­கையின் நல்­லி­ணக்­கமும் பொறுப்­புக்­கூ­றலும் என்ற அடிப்­ப­டையில் இந்த வாய்­மூல அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­கி­றது. மனித உரிமைப் பேர­வை­ய­ானது இலங்­கையின் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரிமை தொடர்­பான தற்­போ­தைய நிலை குறித்து மனித உரிமை அலு­வ­லகம் வாய்­மூல அறிக்கை வெளியிட வேண்­டு­மென கோரி­யது.
2.இலங்கை தொடர்பில் ஐ.நா. அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணைக்கு அமை­வாக வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையை முன்­னி­றுத்தி மனித உரிமை பேர­வையில் கடந்த வருடம் பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் வர­லாற்று ரீதி­யான அனு­ச­ர­ணையை வழங்­கி­யது. சர்­வ­தேச சமூ­கத்­துக்­காக மட்­டு­மன்றி இலங்­கையின் மக்­க­ளுக்­காக இவ்­வாறு இணை அனு­ச­ரணை வழங்­கப்­பட்­டது. அந்­த­வ­கையில் ஜன­நா­யகம் மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­காக பாடு­ப­டு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கிறார்.
3.பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு ஒன்­பது மாதங்கள் கடந்­து­விட்­டன. புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்து 18 மாதங்கள் கடந்­து­விட்­டன. எனவே எஞ்­சி­யி­ருக்­கின்ற இலங்­கையின் பிரச்­சி­னை­களை தீர்த்து சவால்­களை கண்­ட­றிந்து செயற்­பா­டு­களை மேற்­கொள்ள சரி­யான நேரம் வந்­துள்­ளது. இதற்கு மனித உரிமை பேரவை எவ்­வாறு உத­வலாம் என்­பது குறித்தும் ஆரா­யலாம்.
4. ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கைக்கு பெப்­ர­வரி மாதம் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை விஜயம் மேற்­கொண்டார். அந்த விட­யங்­களும் இந்த வாய்­மூல அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அவ­ரு­டைய விஜ­யத்­திற்கு முழு­மையாக ஆத­ர­வ­ளித்த இலங்­கையின் அர­சாங்­கத்­திற்கும் நன்றி தெரி­விக்­கின்றோம். அவர் தனது விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்சித் தலைவர், வெளி­வி­வ­கார அமைச்சர், பாது­காப்பு தள­ப­திகள் ஆகி­யோரை சந்­தித்­துள்­ளனர். அத்­துடன் கண்­டிக்கும் யாழ்ப்­பா­ணத்­திற்கும் விஜயம் மேற்­கொண்ட ஐ.நா. ஆணையாளர் முத­ல­மைச்­ச­ரையும் பாதிக்­கப்­பட்­டோ­ரையும் மதத்­த­லை­வர்­க­ளையும் சந்­தித்­தி­ருந்தார். அந்த விட­யங்­க­ளையும் இந்த வாய்­மூல அறிக்கை உள்­ள­டக்­கு­கின்­றது.
5.இந்த வாய்­மூல அறிக்­கை­யா­னது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட விசேட ஆணை­யா­ளர்கள் மற்றும் அறிக்­கை­யா­ளர்­களின் பரிந்­து­ரை­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்­ளது. ஐ.நா.வுடன் புரிந்­து­ணர்­வுடன் செயற்­படும் இலங்கை அர­சாங்­கத்தின் முடிவை மனித உரிமை ஆணை­யாளர் வர­வேற்­கின்றார்.
இலங்­கைக்கு பல­வந்­த­மாக காணா­மல்­போனோர் குறித்த குழு வரு­கை­தந்­தி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி சித்­தி­ர­வதை உள்­ளிட்ட விட­யங்­களை கையாளும் விசேட அறிக்­கை­யா­ளரும் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்தார்.
சுயா­தீன நீதித்­துறை தொடர்­பான அறிக்­கை­யா­யாளர், சிறு­பான்மை விவ­காரம் தொடர்­பான அறிக்­கை­யாளர் இலங்கை வந்­தி­ருந்தார். இலங்­கை­யா­னது 2017 ஆம் ஆண்டு பூகோள மீளாய்வு, கலந்­தா­ய்­விலும் உட்­ப­டுத்­தப்­படும்.
6.மனித உரிமை அலு­வ­லகம் தொடர்ந்தும் இலங்­கைக்கு தொழில்­நுட்ப உத­வி­களை வழங்கி வரு­கி­றது. இதற்­காக மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அதி­கா­ரி­க­ளையும் வழங்­கு­கி­றது. இலங்­கை­யி­லுள்ள ஐ.நா. அலு­வ­லகம் இதில் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­கி­றது.
7. 2015 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் மறு­சீ­ர­மைப்­பு­க­ளுக்கு பொருத்­த­மான அர­சியல் சூழலை உரு­வாக்­கி­யுள்­ளது. எனினும் முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­புக்­கான வாக்­கு­று­திகள் இன்னும் ஆபத்­தான கட்­டத்­தி­லேயே உள்­ளன. இந்த விட­யத்தில் ஒரு குழப்­ப­க­ர­மான தன்மை காணப்­ப­டு­கி­றது. பொறுப்­புக்­கூ­ற­லிலும் இது தாக்­கத்தை செலுத்தும்.
8.அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பில் குறிப்­பி­டத்­தக்க மாற்றம் அடைய பெற்­றுள்­ளது. மார்ச் மாதம் பார­ாளு­மன்றம் அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது, புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. 2017 ஆம் ஆண்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும்.
9.மனித உரிமை விவ­கா­ரத்தில் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்­பா­னது சிறந்த சந்­தர்ப்­பத்தை பெற்றுக் கொடுக்­கி­றது. அதா­வது இது மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. மேலும் பல்­வேறு உரி­மைக்­கான சட்­ட­மூ­லங்கள், அதி­கா­ரங்­களை கட்­டுப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள், சுயா­தீன நீதித்­து­றைக்­கான சந்­தர்ப்பம், சர்­வ­தேச மனித சாச­னங்­க­ளு­ட­னான ஈடு­பாடு என்­ப­வற்றை இந்த விடயம் வழங்­கு­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது நிலை­மாறு நீதி விட­யத்­திலும் சந்த்ர்ப்­பத்தை பெற்றுக் கொடுக்­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு மாற்ற செயற்­பா­டா­னது பொறுப்­புக்­கூறல் மற்றும் நிலை­மாறு நீதி மனித உரிமை ஆகி­ய­வற்றை வர்த்­தக நோக்­கத்­துக்கா விட்­டுக்­கொ­டுத்­து­வி­டு­மென நாம் எதிர்­பார்க்­க­வில்லை.
10. அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு 19 ஆவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்­றி­யது. அத­னூ­டாக அர­சி­ய­ல­மைப்பு பேரவை உரு­வாக்­கப்­பட்­ட­துடன், சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களும் நிறு­வப்­பட்­டன. எவ்­வா­றி­ருப்­பினும் இலங்­கையின் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வா­னது மேலும் பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
11. அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்­துக்­காக சில வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டுள்­ளது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அர­சாங்கம் சில தமிழ் புலம்­பெயர் அமைப்­புக்கள் மீதான தடையை நீக்­கி­யது. தனிப்­பட்ட நபர்கள் மீதான தடை­களும் நீக்­கப்­பட்­டன. தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அதற்கு அடுத்த நாள் வடக்கு முத­ல­மைச்சர் பௌத்த விகா­ரைக்கு சென்று மரி­யாதை செலுத்­தி­யி­ருந்தார். 2016 மே மாதம் 19 ஆம் திகதி யுத்த வெற்றி விழா­விற்கு பதி­லாக நினைவு தினம் கொண்­டா­டப்­பட்­டது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வடக்கில் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்கு சென்று வரு­கின்­றனர். ஜனா­தி­பதி தன்னை கொல்ல வந்­த­வ­ருக்கே மன்­னிப்பு வழங்­கி­யி­ருந்தார். இவ்­வாறு சில விட­யங்­களை கூறலாம்.
நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்டும்
12. மக்கள் மத்­தியில் நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வ­தற்கு இலங்­கையில் நிறு­வன ரீதி­யான மாற்றம் அவ­சி­ய­மாகும். எவ்­வா­றெ­னினும் சிங்­களே போன்ற இன­வாதப் பிரச்­சா­ரங்கள் குறித்தும் கவனம் செலுத்­து­கிறோம்.
13. அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மற்றும் சிறு­பான்மை சமூ­கங்கள் மத்­தியில் நம்­பிக்கை ஏற்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. 2015 ஆம் ஆண்டில் அர­சாங்கம் வடக்கில் ஒரு­தொகை காணி­களை விடு­வித்­தது. 2016 ஆம் ஆண்­டிலும் ஒரு­தொகை காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கைக்கு சென்­றி­ருந்­த­போது வடக்கின் சில பகு­தி­க­ளுக்கு சென்று காணி விடு­விப்பில் காணப்­ப­டு­கின்ற சிக்­கல்­களை அறிந்­தி­ருந்தார். எவ்­வா­றெ­னினும் ஜூன் மாத­மா­கும்­போது அந்த பிரச்­சி­னைகள் அனைத்தும் தீர்க்­கப்­ப­டு­மென அவர் எதிர்­பார்க்­கின்றார்.
பயங்­க­ர­வாத தடைச் சட்டம்
14. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நபர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்­தியில் பாரிய குழப்பம் காணப்­ப­டு­கி­றது. 2015 ஆண்டு டிசம்பர் மாதம் அர­சாங்கம் 39 பேரை பிணையில் விடு­வித்­தது. இன்னும் 250 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. இது பாதிக்­கப்­பட்ட மக்­களின் குடும்­பங்­களை பாதிப்­ப­துடன் சந்­தேக நபர்­க­ளையும் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அள­விற்கு கொண்டு செல்­கி­றது. தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களை விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக ஒரு பொறி­மு­றையை தயா­ரிக்க வேண்டும்.
15. அர­சா­ஙகம் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தாக கூறி­விட்டு அதன் கீழ் தொடர்ந்து கைது­களை மேற்­கொண்டு வரு­கி­றது. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்­டு­களில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் 40 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சில கைதுகள் பலாத்­கா­ர­மாக இடம்­பெற்­றுள்­ளன. முறை­யான செயற்­பா­டு­க­ளின்று கைதுகள் இடம்­பெ­று­கின்­றன. அதா­வது வெள்ளை வேன் கடத்­தல்­களை போன்று சில கைது சம்­ப­வங்கள் இடம்­பெற்றுள்­ளன. இது மக்கள் மத்­தியில் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அர­சாங்கம் மீதான நம்­பிக்­கையை சீர்­கு­லைத்­துள்­ளது. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு திரும்­பிய புலி­க­ளுடன் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படும் சிலர் சித்­தி­ர­வ­தைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.
இரா­ணுவ பிர­சன்னம்
16. இது அர­சாங்கம் சிவில் கட்­டுப்­பாடு மற்றும் இரா­ணுவ செயற்­பா­டு­களில் எதிர்­கொள்­கின்ற சவால்­களை எடுத்துக் காட்­டு­கின்­றது. வீதி சோதனை சாவ­டிகள் நீக்­கப்­பட்­டமை, இரா­ணுவ மய­மாக்­கலை குறைத்தல் என்­பன பாராட்­டப்­பட்­டாலும் வடக்கு, கிழக்கில் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­மாக இருப்­பது அச்­சு­றுத்­தலை கொடுத்­துள்­ளது.
17. அர­சாங்கம் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லாக புதிய சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தாக கூறி­யுள்­ளது. அது ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பரிந்­து­ரைக்கு அமை­வாக நடை­பெறும் என நம்­பு­கின்றோம். இந்த விட­யத்தில் மனித உரிமை ஆணைக்­கு­ழு­விற்கு அர­சாங்கம் அதி­கா­ரங்­களை வழங்க வேண்டும். தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் இருக்கும் இடங்­களை பார்ப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட வேண்டும்.
விசா­ர­ணைகள்
18. அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் சர்­வ­தேச நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த வேண்டும். நீதி­மன்றம் முன்­னுள்ள வழக்­கு­களை விரை­வாக கையாள வேண்டும். காணா­மல்­போன ஊட­க­வி­ய­லாளர் பிரகித் ஹெக்­னெ­லி­கொட கொல்­லப்­பட்ட ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்க, கொல்­லப்­பட்ட எம்.பி. க்களான ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், நட­ராஜா ரவிராஜ் , றக்பீ வீரர் வஸீம் தாஜுதீன் போன்ற வழக்­கு­களில் முன்­னேற்­றத்தை காண முடி­கின்­றது. திரு­கோ­ண­மலை ஐந்து மாணவர் படு­கொலை, அரச சார்­பற்ற நிறு­வன ஊழியர் படு­கொலை வழக்­குகள் தொடர்­கின்­றன.
19. விஸ்­வ­மடு பகு­தியில் ஒரு பெண்ணை சித்­தி­ர­வதை செய்த வழக்கில் கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் நான்கு இரா­ணுவ வீரர்கள் குற்­ற­வா­ளி­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டனர். ஆனால் இது போன்ற தண்­ட­னைகள் குறை­வா­க­வுள்­ளன. ஆணை­யாளர் இலங்­கைக்கு சென்­றி­ருந்­த­போது 39 பாலியல் வல்­லு­றவு சம்­ப­வங்கள் தொடர்பில் (இரா­ணுவம் சம்­பந்­தப்­பட்­ட­தாக கூறப்­படும்) அறி­விக்­கப்­பட்­டது. பிள்­ளையான் என்­பவர் பர­ரா­ஜ ­சிங்கம் கொலை வழக்­கி­லி­ருக்­கின்றார். எனினும் ஏனைய ஆயுதக் குழுத் தலை­வர்கள் அதா­வது கொலை, கடத்தல் போன்­ற­வற்றில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இன்னும் விசா­ர­ணையை எதிர்­கொள்ள வில்லை. இந்த சம்­ப­வங்கள் மிக விரை­வாக விசா­ரணை நடத்­தப்­பட்டு நிலை­மா­று­கால விசா­ரணை பொறி­மு­றைக்கு வர­வேண்­டு­மென வலி­யு­றுத்­து­கிறோம்.
20. சாட்­சி­யா­ளர்­களை பாது­காக்கும் முறைமை வர­வேண்டும். புதிய அர­சாங்கம் இது தொடர்­பான சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றி­யது. சாட்­சி­யா­ளர்­களை பாது­காக்கும் அதி­கார சபை 2016 ஆம் ஆண்டு நிறு­வப்­பட்­டது.
21. சாட்­சி­யார்­களை பாது­காக்கும் சட்­ட­மூ­லத்தை முழு­மை­யாக மீளாய்வு செய்து ஒரு­சி­றந்த முறைமை கொண்­டு­வ­ரு­மாறு அர­சாங்­கத்தை மனித உரிமை அலு­வ­லகம் வலி­யு­றுத்­து­கி­றது.
பொறி­மு­றையில் தயக்கம்
22. ஜெனிவா பிரே­ர­ணை­யா­னது பரந்­தப்­பட்ட நீதிப் பொறி­மு­றைக்­கான முறையை மேற்­கொள்­ளு­மாறு கோரு­கி­றது. அதில் உண்மை கண்­ட­றிதல், நட்­ட­ஈடு வழங்­குதல், நிறு­வன ரீதி­யான மறு­சீ­ர­மைப்பு என்­பன பிரே­ரிக்­கப்­பட்­டுள்­ளன. விசா­ரணை பொறி­மு­றையில் அர­சாங்கம் என்­னதான் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டாலும் அதில் ஒரு­வித தயக்­கமும் தாம­தமும் நில­வு­கி­றது.
23. 2015 ஆம் ஆண்டு பிர­தமர் பொறி­மு­றையில் மாறு­பட்ட நிறு­வ­னங்­களை இணைக்கும் வகையில் ஒரு செயற்­கு­ழுவை நிய­மித்தார். இதற்கு நல்­லி­ணக்­கத்­துக்­கான செய­ல­கமும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது. இந்த நல்­லி­ணக்க செய­ல­கத்­துக்கு செய­லாளர் நாயகம் நிய­மிக்­கப்­பட்­டமை வர­வேற்க்­கத்­தக்­கது.
பெண்­களை பங்­கு­கொள்ளச் செய்­யுங்கள்
24. பிரே­ர­ணைக்கு அமை­வாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் ஆலோ­சனை பெறப்­பட்டு விசா­ரணை பொறி­முறை தயா­ரிக்­கப்­பட வேண்டும். விசே­ட­மாக விசா­ரணை பொறி­மு­றை­யா­னது பெண்­களை அதி­க­ளவில் பங்­கு­ப­டுத்­து­வ­தாக அமைய வேண்டும்.
25. 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் அர­சாங்கம் 11 பேர் கொண்ட செய­ல­ணியை நிய­மித்­தது. பொறி­மு­றையில் ஆலோ­சணை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இது நிய­மிக்­கப்­பட்­டது. பெப்­ர­வரி மாதம் ஆலோ­சணை பெறும் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. எழுத்­து­மூ­லமும் சமர்ப்­ப­ணங்கள் பெறப்­ப­டு­கின்­றன. இந்த விட­யத்தில் வெ ளிநா­டு­க­ளி­லுள்ள பாதிக்­கப்­பட்­ட­டோரும் புலம்­பெயர் மக்­களும் சம்­பந்­தப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென ஆணையாளர் வலி­யு­றுத்­து­கின்றார்.
காணாமல் போனோர்
விசா­ரணை அவ­சியம்
26. அர­சாங்கம் காணா­மல்­போனோர் தொடர்பில் முக்­கி­யத்­துவம் கொடுத்து செயற்­ப­டு­கி­றது. இந்த விட­யத்தில் அர­சாங்கம் திற­மை­யா­கவும் சமா­தா­னத்­து­டனும் செயற்­படும் என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
27. அதே­நேரம் அர­சாங்கம் நிலை­மா­று­கால விசா­ரணை பொறி­முறை தொடர்பில் பல்­வேறு வகை­யி­லான ஆலோ­ச­ர­ணை­களை நடத்தி வரு­கி­றது. இதில் ஒரு­சில வெ ளிப்­ப­டைத்­தன்மை காணப்­ப­டு­கி­றது. ஆனால் இந்த செயற்­பா­டுகள் முன்­கூட்­டிய பெறு­பே­று­களை பெறு­வ­தா­கவும் அர்த்­த­மற்­ற­தா­கவும் அமைந்­து­வி­டக்­கூ­டாது. இதில் சிந்­த­வி­த­மான பொது­மக்கள் பங்­கேற்பு செயற்­பா­டுகள் இடம்­பெற வேண்டும்.
அலு­வ­லகம் நிரந்­த­ர­மா­க­வேண்டும்
28. காணா­மல்­போ­னோர்­களை பற்­றிய அலு­வ­ல­கத்தை அமைப்­பதில் இந்த குறைப்­பாட்டை நாம் கண்டோம். காணாமல் போனோரை தொடர்பில் அர­சாங்கம் அவ­ச­ர­மாக செயற்­பட்டு உண்­மைய கண்­ட­றிய வேண்டும். தற்­போது பிரே­ரிக்­கப்­பட்­டுள்ள அலு­வ­ல­க­மா­னது நிரந்­த­ர­மா­ன­தா­கவும், தீர்­வு­களை கொடுக்­கக்­கூ­டி­ய­தா­கவும் இருக்க வேண்டும்.
29. அர­சாங்கம் மேற்­கொள்ளும் காணா­மல்­போனோர் பற்­றிய அலு­வ­ல­கத்­திற்­கான வரைபை அர­சாங்­கத்தின் ஆலோ­சனைக் குழு நிறு­வி­யுள்­ளது. ஆனால் அந்த வரைபு மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வில்லை.
30. காண­மால்­போனோர் பற்­றிய சர்­வ­தேச சாச­னத்தில் அர­சாங்கம் கைச்­சாத்­திட்­டுள்­ளது. இது பல­வந்­த­மாக காணா­மல்­போனோர் விட­யத்தை குற்­ற­வியல் கோவையின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்கு உதவும் என ஆணை­யாளர் நம்­பு­கின்றார். காணா­மல்­போ­னோ­ருக்­கான சான்­றி­தழ்­களை வழங்­கு­வ­தற்கு இலங்கை அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இதற்­கான வரைபு வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­துடன். விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. காணா­மல்­போனோர் ஆணைக்­கு­ழுவின் இரண்­டா­வது அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­க­பட்­டுள்­ளது.
வெளிப்­ப­டைத்­தன்­மை­யில்லை
31. காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­திற்­கான வரைபை தயா­ரித்த நிபு­ணர்கள் நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றையின் வடி­வத்தை தயா­ரிப்­ப­தற்கும் பங்­க­ளிப்பு செய்­கின்­றனர். குறிப்­பாக உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு, விசேட நீதி­மன்றம் ஆகி­ய­வற்றில் இவர்கள் செயற்­ப­டு­கின்­றனர். எனினும் இவற்­றுக்­கான ஆவ­ணங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இந்­த­வி­டயம் அவ­சி­ய­மா­னதும் வர­வேற்க்­கத்­தக்­கது என்­பதை குறிப்­பி­டு­வ­துடன் வெளிப்­ப­டைத்­தன்­மை­யின்­மையின் குறைப்­பாடு, பொறி­முறை தொடர்­பான செயற்­பா­டு­களை குறைத்து மதிப்­பிட செய்­கி­றது.
சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­காரம்
32. நீதி விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் பங்­க­ளிப்பு தொடர்பில் மிக முக்­கி­ய­மான கேள்வி இன்னும் நிலு­வையில் இருக்­கி­றது. 2016 ஆம் ஆண்டு மே மாதம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விசா­ரணை பொறி­முயைில் சர்­வ­தேச பங்­க­ளிப்பு இருக்­காது என்று இரா­ணுவ உயர் அதி­கா­ரி­க­ளுக்கு கூறி­யி­ருந்தார். பாதிக்­கப்­பட்ட மக்கள் பார்­வையில் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் சர்­வ­தேச பங்­க­ளிப்பு அவ­சி­ய­மாக உள்­ள­தாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹுசேன் உணர்­கிறார். காரணம் இலங்­கையின் நீதி நிறு­வ­னங்கள் தற்­போது நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யுள்­ளது. ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ர­ணையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விட­யங்­களில் யுத்த குற்­றங்கள் மற்றும் மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­களும் இருக்­கலாம் என கரு­தப்­ப­டு­கி­றது.
33. யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் கொத்­தணிக் குண்­டுகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தற்­போது அண்­மைய கால அறிக்­கை­க­ளில புதிய ஆத­ராங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சுயா­தீ­ன­மான பக்­க­சார்­பற்ற விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் கோரிக்கை விடுக்­கி­றது.
34. பாது­காப்பு மறு­சீ­ர­மைப்­புக்­களை அர­சாங்கம் எவ்­வாறு செய்யப் போகி­றது என்­பது முக்­கிய சவா­லாகும். இலங்கை இரா­ணுவப் படைகள் சர்­வ­தேச மட்­டத்தில் உறு­தி­யான இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
35. இலங்கை அரசாங்கம் ஜெனிவா பிரேரணை அமுலாக்கத்தில் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் நீதிப்பொறிமுறையை தாயரிக்கும் விடயத்திலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் ஊக்கமடைகிறது. அரசியலமைப்பு பேரவை உருவாக்கம் சுயாதீன மனித உரிமை ஆணைக்குழு உருவாக்கம் காணாமல்போனோர் பற்றிய சாசனத்தில் கைச்சாத்திடல் போன்றவைகள் இலங்கையின் எதிர்காலத்திற்கு பாரிய செல்லுபடியான செயற்பாடுகளாகும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டதும் காணாமல்போனோர்களது உறவினர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உருவாக்கப்படும் நீதி வழங்கும் பொறிமுறையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பரந்துப்பட்ட ரீதியில் ஆராயப்பட வேண்டுமென்பதுடன் அவை மீண்டும் இடம்பெறால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
36. காணி விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பிலுள்ளவர்கள் தொடர்பில் கடந்த காலத்தில் மேலும் முன்னேற்றத்தை அடைந்திருக்கலாம். இது சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். பலாத்கார கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், இராணுவ கண்கானிப்பு போன்றன தொடர்பில் தொடரும் குற்றச்சாட்டுகள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்.
37. ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் பரந்துபட்ட உபாய மார்க்கத்தை வெ ளியிட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை ஆணைாயளர் எதிர்பார்க்கிறார். இது சர்வதேச உதவிக்கு வலுசேர்க்கும் இதில் தற்போதைய சிவில் சமூகத்துடனான ஆலோசனைகளை பலப்படுத்துவதாக அமையும்.நீதிப்பொறிமுறையை நிறுவுவதற்கும் பக்க பலமாக அமையும். இந்தவிடயத்தில் ஐ.நா. அலுவலகம் தொடர்ந்து ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளது.
38. இலங்கையின் செயற்பாடுகளுக்கு கால அவகாசம் தேவையாகும். பல்வேறு செயற்பாடுகளை கையாளுதல், நிலைமாறு கால நீதி, பொருளாதார மீள்கை, பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு என்பன எந்தவோர் அரசாங்கத்தினதும் செயற்பாட்டில் சவாலை ஏற்படுத்தும். ஆனால் அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில் குறிப்பாக பாதிக்கபட்ட மக்களுக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எதிர்பார்க்கிறார். ஐ.நா. மனித உரிமை ஆணைாயளர் 34 ஆவது கூட்டத்தொடரில் முழுமையான அறிக்கையை வெளியிடுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here