வவுனியாவில் காணாமல் போனோரின் உற வுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத் தப்பட்டு காணாமல் ஆக் கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஐ.நாவே நாங்கள் நாதி
இனமா? எங்களுக்கு நீதி இல்லையா?, முள்ளிவாய்க்காலில் ஒப்படைத்த உறவுகளின் கதி என்ன?, எங்கே எங்கே எங்கள் பிள்ளைகள் எங்கே? பதில் கூறு அரசே’ எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
காணாமல் போனோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,
எங்களது பிள்ளைகளை விடாவிட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு காட்டுங்கள். நாங்கள் யுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் அலைந்து திரிகிறோம் எங்களின் அவலங்களை விற்று பிழைப்பு நடத்தாதீர்கள் என தெரிவித்தனர்.
இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தமது கருத்துக்களையும் உள்வாங்கி நீதியான தீர்வைப் பெறும் வகையில் அது அமைக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.