ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறிவிடலாம் என 51.8 சதவீத பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்துவிட்டதால், பிரிட்டன் மட்டும் யூனியனிலிருந்து வெளியேறுகிறது.
பிரெக்ஸிட் என்ற இந்த பொது வாக்கெடுப்பு வியாழன் அன்று நடந்தது.
பொதுத் தேர்தலை விட அதிக மக்கள் பங்கேற்ற தேர்தல் இது. யூனியனிலிருந்து வெளியேறலாம், வெளியேறக் கூடாது என்ற இரு தரப்பினருமே சரிக்கு சரியான பலத்தில் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனால் உலகச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. ஆசியச் சந்தைகள் அனைத்தும் இன்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன. பிற்பகலில் இந்தியச் சந்தைகள் சென்செக்ஸ் 3 சதவிகிதமும், நிஃப்டி 3.5 சதவிகிதம் சரிவு கண்டது. ஹாங்செங், ஷாங்காய், டவ்ஜோன்ஸ் உட்பட அனைத்து ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக நிக்கி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. பிரிட்டனின் இந்த முடிவால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் உண்டாகும் என்று வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது. சர்வதேச நாணயங்களான யூரோ, பவுன்ட் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று ஆட்டம் கண்டது.