ஜெனீவாவில் இனப்படுகொலைச் சாட்சியங்கள் திட்டமிட்டு திருட்டு!

0
240

imageஜெனீவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் மையத்தின் முன்பாக உள்ள முருகதாசன் திடலில் வைக்கப்பட்டிருந்த தமிழின இனப்படுகொலைச் சாட்சியப் படங்கள் இனந்தெரியாதவர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளன.
செயற்பாட்டாளர் கஜன் அவர்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த இனப்படுகொலைச் சாட்சியப் படங்கள் மனித உரிமைகள் மையம் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டு வந்தது.
இதனை பல்வேறு நாடுகளையும் சார்ந்த மக்கள் மற்றும் மனித உரிமைவாதிகள் பார்வையிட்டு தமது அதிர்ச்சிகளையும் வெளியிட்டுவந்தனர். இது சிறீலங்கா அரசிற்கு பெருத்த நெருக்கடியைக் கொடுத்துவந்தது.
ஜெனீவாவில் கடந்த வாரம் கூட்டத்தொடர் ஆரம்மாகி நடைபெற்று வரும் நிலையில், இவ் இனப்படுகொலைச் சாட்சியங்கள் மீண்டும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புதன்கிழமை மதியம் ஒரு மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இவை அங்கிருந்து இனந்தெரியாதவர்களால் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அங்குள்ள கண்காணிப்பு ஒளிப்பட கருவி மூலம் அவற்றை அகற்றியவர்களை அடையாளம் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here