பிரான்ஸ் நாட்டில் நிலவி வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுக்கு 48,000 பேர் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார ஏஜென்சி அண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில், நாடு முழுவதும் நிலவி வரும் சுற்றுக்ச்சூழல் மாசுபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் 48,000 பேர், அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 9 சதவிகிதம் மக்கள் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
காற்றில் PM2.5 வகையை சார்ந்த துகள்கள் கலந்திருப்பதால் இதனை சுவாசிக்கும் போது சுவாசக்கோளாறுகளும், இதய பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு பிரான்ஸ் நாட்டில் 47 மில்லியன் மக்கள் உள்ளாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 வயதுள்ள ஒரு நபர் 1,00,000 மக்கள் உள்ள ஒரு நகரத்தில் வசித்தால், அவருடைய வாழ்நாளில் 15 மாதங்கள் குறைந்துவிடும். இந்தளவிற்கு சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவைகளால் தான் அதிகம் உருவாகிறது.
நகர் புறங்களை விட்டு வெளியே வசிக்கும் நபர்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவாக இருப்பதனால், அவர்களின் வாழ்நாளில் 9 மாதங்கள் மட்டுமே குறைகிறது.
மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தினால், ஆண்டுக்கு 34,000 நபர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என்றும், இவர்கள் கூடுதலாக 9 மாதங்கள் வாழவும் முடியும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.