சார்லி ஹெப்டோ கார்டூனை வெளியிட்ட ஜெர்மன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்!

0
425

arp 3 - Copyபிரான்ஸ் பத்திரிக்கையான் சார்லி ஹெப்டோ தாக்கப்பட்டது தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்ட ஜெர்மன் பத்திரிகை அலுவலகம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் அங்கிருந்த ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஜெர்மன் போலீசார் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டதால் கடந்த வாரம் பிரான்சில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த 12 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இத்தாக்குதல் சம்பவம்.

இது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் இன்று ஜெர்மனியில் உள்ள பத்திரிக்கை அலுவலகம் ஒன்று தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.

பிரான்சின் சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. கற்கள் மற்றும் எரியும் பொருட்களை பத்திரிக்கை அலுவலகத்தின் உள்ளே வீசி மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், பத்திரிக்கை அலுவலகத்தின் சில அறைகள் சேதம் அடைந்ததாகவும், ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் யாருக்கும் காயமில்லை எனவும் ஜெர்மன் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here