இந்தியாவில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 79 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் உள்ள பீகார், ஜாகர்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.
மழையின்போது இடியுடன் கூடிய மின்னலும் தாக்கியுள்ளது. இந்த மின்னலுக்கு பீகாரில் 53 நபர்களும், ஜாகர்கண்ட்டில் 10 பேரும் மத்திய பிரதேசத்தில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலர் மழை பெய்தபோது பண்ணைகளில் பணிபுரிந்துள்ளனர்.
இந்தியாவில் பருவமழை கடுமையாக பெய்யும்போது மின்னல் தாக்கி நபர்கள் உயிரிழப்பது கடந்த 2005ம் ஆண்டில் இருந்து தொடர்கதையாக உள்ளது.
தேசிய குற்றப் பதிவு அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரத்தில் மின்னல் தாக்கி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 பேர் வரை பலியாகி வருவதாக தெரிவித்துள்ளது.
யூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் பருவமழையானது வருடத்தில் பெய்யும் மழையில் 80 சதவிகிதம் அளவிற்கு பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.