மீள்­கு­டி­யேற்றம் ஒரு மாத­கா­லத்­திற்குள் இடம்­பெ­றா­விட்டால் பாரிய போராட்டம்!

0
199

valikamam-northகாணி­களில் மீள்­கு­டி­யே­றுவோம் என்­கின்­றனர் வலி.வடக்கு மக்கள்

வலி.வடக்­கிற்­கான மீள்­கு­டி­யேற்றம் ஒரு மாத­கா­லத்­திற்குள் இடம்­பெ­றா­விட்டால் பாரிய போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென
தெரி­வித்த தற்­கா­லிக நலன்­புரி முகாமில் வாழ்ந்­து­வரும் வலி.வடக்கு மக்கள், குறித்த போராட்­டமே இறு­திப்­போ­ராட்டம் எனவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.
அத்­து­டன்­ எத்­த­கைய எதிர்ப்­புக்கள் வந்­தாலும் அதனை உடைத்­தெ­றிந்து சொந்த நிலத்தில் மீள் குடி­யே­றுவோம் எனவும் அவர்கள் தெரி­வித்­துள்­ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வலி.வடக்கு மக்கள் மேலும் தெரி­வித்­த­தா­வது,
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் யாழ்ப்­பா­ணத்­திற்கு தேசிய நத்தார் நிகழ்வை கொண்­டா­டு­வ­தற்­காக வருகை தந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாம் இடம்­பெ­யர்ந்து வாழ்­கின்ற தற்­கா­லிக நலன்­புரி நிலை­யங்­க­ளுக்கு வருகை தந்து எமது சொல்­லொணாத் துன்­பங்­களை நேர­டி­யா­கவே அவ­தா­னித்­தி­ருந்தார்.
இத­னை­ய­டுத்து யாழ்.பழைய மாந­க­ர­சபை வளா­கத்தில் இடம்­பெற்ற நத்தார் விழாவில், இன்னும் ஆறு மாத காலத்தில் வலி.வடக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­களை சொந்த இடங்­களில் மீளக்­கு­டி­ய­மர்த்­துவேன் என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார்.
ஜனா­தி­பதி கூறி­ய­தற்கு அமைய விரைவில் மீளக்­கு­டி­யேற்­றப்­ப­டுவோம் என நம்­பி­யி­ருந்த நிலையில் அவர் வழங்­கிய அவ­காசம் தற்­போது முடி­வ­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் கடந்த சனிக்­கி­ழமை அல்­பிரட் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கை திறந்து வைக்க வருகை தந்த ஜனா­தி­பதி எமது மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான காத்­தி­ர­மான ஓர் பதி­லையும் வழங்­க­வில்லை. இது எம்மை மேலும் கவ­லைக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.
மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் விடிவு கிடைக்­கு­மென நம்பி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளித்த எமக்கு தற்­போது ஏமாற்­றமே மிஞ்­சி­யுள்­ளது. எனினும் மேலும் ஒரு மாத கால அவ­கா­சத்தை ஜனா­தி­ப­திக்கு வழங்­கு­கின்றோம். அக்­கா­லப்­ப­கு­திக்­குள்ளும் எம்மை சொந்த இடத்தில் ஜனா­தி­பதி மீள்­கு­டி­யேற்ற தவ­று­வா­ராயின் இறு­தியும் அறு­தி­யு­மான பாரிய போராட்டம் எம்மால் முன்­னெ­டுக்­கப்­படும்.
இதன்­போது எத்­த­கைய எதிர்ப்­புக்கள் வந்­தாலும் அதனை தகர்த்­தெ­றிந்து எமது நிலத்தை நாம் கைப்­பற்­றுவோம். தற்­போது நாட்டில் நல்­லி­ணக்கம், சமா­தானம் பற்றி பேசப்­படும் நிலையில் எமது காணி­க­ளுக்குள் செல்ல தடை போடப்­ப­டு­வது ஏற்­கத்­தக்க விடயம் அல்ல. நாம் பல வரு­டங்­க­ளாக எமது நிலங்­களை விடு­விக்­கு­மாறு கோரி வரு­கின்ற நிலையில் எத்­த­கைய ஆக்­க­பூர்­வ­மான செயற்­பாடும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லை­யி­லேயே எமது இறுதிப் போராட்­டத்தை நாங்கள் ஒரு மாத கால அவ­கா­சத்தின் பின்னர் முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.
வாழ்­வியல் சார்ந்த எமது போராட்­டத்தின் பின்­ன­ணியில் எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் இல்லை. நாம் எமது நிலத்தை விடு ­விக்­கவே நீண்­ட­காலம் போராடி வரு­கின்றோம். சொந்த நாட்­டுக்­குள்­ளேயே இடம்­பெ­யர்ந்து 27 வரு­டங்­க­ளா­கி­விட்­டன. இந்­நி­லையில் தற்­கா­லிக முகாமில் தங்­கி­யி­ருப்­ப­தனால் நிரந்­த­ர­மான தொழில் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­மு­டி­யா­த­துடன் பொரு­ளா­தா­ரத்­தையும் ஈட்­ட­மு­டி­ய­வில்லை.
இந்த ஆண்­டுக்குள் எமது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டா­விட்டால் எமது பிள்­ளைகள் உட்­பட அரை­வா­சிக்கும் மேற்­பட்டோர் பட்­டி­னி­யா­லேயே இறந்­து­வி­டு­வார்கள்.
இந்­நி­லையில் ஜனா­தி­ப­தி­யி­னு­டைய மெள­னத்தால் நாம் மிகவும் வெறுப்­ப­டைந்தும் சலித்தும் போயு­ள்ளோம். எனவே எமது நிலங்­களை நாமே போராடி பெற்­றுக்­கொள்ள வேண்­டிய ஓர் இக்­கட்­டான நிலை தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. எனினும் நல்­லி­ணக்க அர­சி­லுள்ள நம்பிக்கை காரணமாக மேலும் ஒரு மாத கால அவகாசத்தை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
இந்த ஒரு மாதகால அவகாசத்திற்குள் ஜனாதிபதி எமது மீள்குடியேற்றம் தொடர்
பில் ஆக்கபூர்வமான காத்திரமான சமிக்
ஞைகள் எதனையும் வழங்காது விட் டால் நாம் இறுதி போராட்டத்தை நடத்தி
எமது சொந்த நிலங்களை நாமே கையகப்
படுத்துவோம். இப்போராட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here