இறுதிப் போரில் கொத்துக்குண்டு ஆதாரங்களை வெளியிட்டது த கார்டியன்!

0
188

10590>வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் இலங்கை படைத்தரப்பினரால் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் த கார்டியன் ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் ஆட்சியில் இருந்தவர்கள், படைத்துறை உயரதிகாரி கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் இந்த ஆதாரங்கள் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் த காட்டியன் நேற்று வெளியிட்டுள்ள தகவல்களை இங்கே தொகுத்துத் தரப்படுகிறது.
இலங்கையில் இறுதிக்கட்டப் போர் இடம் பெற்றபோது அரசாங்கத்தால் போர் தவிர்ப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இந்த கொத்துக் குண்டுகளும், அதன் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்டப் போரின் போது இந்த போர் தவிர்ப்பு வலயப் பிரதேசங்களில் மூன்று இலட்சம் மக்கள் இருந்துள்ளனர்.
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை யின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாக சிறிது காலம் படைத்துறை அமைச்சராக இருந்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச படைத்துறைச் செயலாளராகவும், அமைச்சர் சரத் பொன்சேகா படைத்தள பதியாகவும் இருந்துள்ளனர்.
இந்த கொத்துக் குண்டுகளை இணங்கண்டுள்ள மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் ஒருவர், இந்த கொத்துக் குண்டுகள் ரஷ்ய நாட்டு தயாரிப்பு என உறுதிப்படுத்தியுள்ளார்.
 இறுதிக்கட்டப் போரின் போது போரில் ஈடுபட்ட இருதரப்பினராலும் போர்க்குற்றங்களும், மனிதவுரிமை மீறல்களும் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நாவும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும் குற்றம் சுமத்தியி ருந்தன.
ஆயினும், அதனை முன்னைய அரசாங்கம் மறுத்திருந்தது. சர்வதேச போர் நியமங்களின்படியே படையினர் போரை நடத்தியிருந்ததாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போது கூறியிருந்தார்.
கொத்துக் குண்டுகள் பெரும் பேரழிவை ஏற்படுத்தக் கூடியன. அதுவும் மக்கள் நடமாட்டம் கூடியிருந்த சிறிய பிரதேசத்துக்குள் போடப்படும் கொத்துக் குண்டுகள் பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தக்கூடியன.
கடந்த 2011ஆம் மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆனையிறவு, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களுக்கு அருகில் 42 கொத்துக் குண்டுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஹலோ ட்ரஸ்ட் கண்டிவெடி அகற்றும் அமைப்பின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைப் போன்று இந்தக் கொத்துக் குண்டுகளின் பாகங்கள் கிளிநொச்சி மற்றும் சாலை பிரதேசத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட தாக இந்த புகைப்பட ஆதாரங்களை தந்தவர் தெரிவித்தார். இதனைத்தவிர வெடிக்காத நிலையில் இருந்த கொத்துக்குண்டு ஒன்று சுண்டிக்குளம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது படையினரால் தாக்குதல் நடத்தப்பட்ட புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகாமையில் கொத்துக் குண்டுகளின் பாகங்கள் கண்டுபிடிக்க ப்பட்டதாக ஐ.நாவின் நிபுணர் ஒருவர் தெரி வித்திருந்தமை தொடர்பான மின்னஞ்சல் ஒன்று கடந்த 2012ஆம் ஆண்டு கசிந்திருந்தது.
 ஹலோ ட்ரஸ்ட் அமைப்புகளில் பணியாற்றிய முன்னாள் பணியாளர்களும் கொத்துக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை எமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த அமைப்பின் முன்னாள் பணியாளர் ஒருவர் போர் தவிர்ப்பு வலயமாக  அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த புதுக்குடியிருப்பில் கொத்துக் குண்டு கண்டு பிடிக்கப்பட்டிருந்ததாக எமக்கு தெரிவித்தார்.
இறுதிக்கட்டப் போரின் போது  படையினரால் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பலர் எமக்கு சாட்சியம் அளித்துள்ளனர்.
இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்தி யருக்கவில்லை. விமானப் படையினரே வான் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இந்தப் போரின் போது படையினர் பாரிய தாக் கங்களை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தி இருந்ததாக ஏற்கெனவே பல சர்வதேச அமைப்புகள் குற்றம் சுமத்தியிருந்தன.
அரசாங்கத்தால் போர் தவிர்ப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து கொத்துக் குண்டுகளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் மற் றும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 32 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அடுத்த வாரம் விவாதம் இடம்பெறவுள்ள நிலையில், படையினரால் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளமை குறி ப்பிடத்தக்கது.