சிறிலங்கா இனவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று நடத்தினார்கள்.
தமிழருக்கு முழுமையான நீதி வெகு விரையில் கிடைக்கவேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்று முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதில் புலம்பெயர் நாடுகள் பலவற்றில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். பிரான்சில் இருந்தும் பேருந்தில் மக்கள் சென்றிருந்தனர்.
http://youtu.be/PUMgsknA9Lk