விடுவிக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை : ஈழ அகதி!

0
207

dayabaran-n-udayakala-family-720x480தாம் எவ்வித குற்றங்களிலும் ஈடுபடவில்லையென்றும், தம்மை விடுவிக்காவிட்டால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொள்வதாகவும் திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதியான கே.தயாபரராஜ் தெரிவித்துள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாம் எவ்வித குற்றங்களிலும் ஈடுபடவில்லையென்றும் இலங்கையிலும் தமக்கெதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் நிலுவையில் இல்லையென குறிப்பிட்டுள்ள தயாபரராஜ், தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தற்போது சுகயீனமுற்றுள்ள தயாபரராஜ் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு தமது குடும்பத்தினருடன் அகதியாக இந்தியா சென்ற தயாபரராஜ் மீது, கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அத்தோடு, அவரது மனைவியான உதயகலா மண்டபம் முகாமிலுள்ள தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட உதயகலா, தம்மை விடுவித்து கணவன் மற்றும் பிள்ளைகளுடன் வாழ வேண்டுமென கோரியதையடுத்து, அவர் தனி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தனி வீடு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here