தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் யாழில் உள்ள வீட்டுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை சென்றுள்ளார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் புதல்விக்கு பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவே மைத்திரிபால நேரில் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
முன்னதாக யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக மைத்திரிபால யாழ்ப்பாணம் செல்லும் அதே தினம் தனது புதல்வியின் பிறந்த தினம் என்பதால் நேரில் வீட்டுக்கு வருகை தருமாறு குறித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் இந் நிலையிலேயே மைத்திரிபால நேரில் சென்று வாழ்த்தியதோடு சிறு விருந்துபசாரத்திலும் பங்கேற்றதாகவும் தெரிய வருகின்றது.
இக்கொண்டாட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநா தன், மஸ்தான் ஆகியோரும் பங்கேற்றி ருந்தனர்.