துப்பாக்கி சூட்டை நடத்தியமை நீதியை மீறும் செயல் :சர்வதேச மன்னிப்பு சபை

0
159

imageஇந்தோனேசியா கடற்பகுதியில் இருந்து இலங்கை அகதிகளை கரையிறங்கவிடாமல் வானை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூட்டை நடத்தியமை நீதியை மீறும் செயல் என்று சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை குறித்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது,

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் பயணித்தவர்கள் படகு பழுதடைந்ததன் காரணமாக இந்தோனேசியா கடற்பகுதியில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இதன் காரணமாக இலங்கை அகதிகளை கரையிறங்கவிடாமல் இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் வானை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூட்டை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் குறித்த செயல் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எனவும், குறித்த இலங்கை அகதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என மன்னிப்பு சபையின் தென்னாசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜோசெப் பெனடிக்ட் இந்தோனேசிய அதிகாரிகளை கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here