நிலங்களை விடுவிக்காவிடின் தொடர் உண்ணாவிரத போராட்டம் :வலி.வடக்கு மக்கள் எச்சரிக்கை!

0
226

missing-peson_2மைத்திரிபால சிறிசேன தமது சொந்த நிலங்களை விடுவிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக வலி.வடக்கு மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் நம்பி வாக்களித்த எம்மை ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பட்டதில் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே வலிவடக்கு மக்களது பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது நிலங்களை பிள்ளைகளை விடுவிப்பார் என தமிழ் கட்சிகள் கூறி அவருக்கு வாக்களிக்குமாறும் கூறியிருந்தனர். ஆனால் அது ஒன்றுமே இன்று வரை நடைபெறவில்லை. எம்மை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்க கூறியவர்களும் தற்போது மௌனமாக உள்ளனர்.

ஜனாதிபதி எம்மை ஏமாற்றுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களை மேற்கொள்ள நாங்கள் முயற்சி செய்த போதிலும் தமிழ் கட்சிகள் எம்மை போராட்டங்களில் ஈடுபடவிடாது தடுத்து விட்டனர். நல்லாட்சியை குழப்பம் செய்யக்கூடாது என அவர்கள் எமக்கு அறிவுரை கூறுகின்றனர். ஆறு மாதங்களிற்குள் எமது காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

ஆனால் எமது காணிகளில் உப்போதும் இராணுவம் தான் நிலை கொண்டுள்ளது. நல்லாட்சியை குழப்பி விடக்கூடாது என்பதற்காக நாங்களும் இந்த ஆறுமாதங்களாக ஒன்றும் செய்யாமல் பொறுமையுடன் இருந்தோம். ஆனால் தற்போது ஜனாதிபதி வழங்கிய கால எல்லையும் கடந்து விட்டது. இனி யாரையும் நம்பி பயனில்லை. போராட்டத்தின் மூலமே எமக்கு தீர்வு கிடைக்கும்.

எமது முதற் கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் இருபத்தி இரண்டாம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்த உண்ணாவிரத போராடத்தினை தையிட்டியை சொந்த இடமாக கொண்ட வன்னியசிங்கம் பிரபா என்பவர் முன்னிண்டு நடாத்தவுள்ளார். இதற்கு ஏனைய இடம்பெயர்ந்த மக்களும் ஆதரவு வழங்கவுள்ளனர்.

இன்றையதினம் விஜயம் செய்கின்ற ஜனாதிபதி கீரிமலையில் குறைந்தளவு காணிகளை விடுவிக்கவுள்ளதாக அறிகின்றோம், நாம் கேட்பது எமது வளம் கொழிக்கும் பூமியான தையிட்டி, மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை, ஊரணி, உட்பட ஏனைய இடங்களை விடுவிக்குமாறே, ஆகையால் ஜனாதிபதி இவற்றை விடுவிப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டம் எம்மால் முன்னெடுக்கப்படும்.

எமது நிலமீட்புக்கான இந்த போராட்டத்தை மீண்டும் நல்லாட்சி என கூறிக்கொண்டு குழப்பிவிட வேண்டாம் என தமிழ் கட்சிகளை அந்த மக்கள். மேலும் குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினையும் தாம் கோரி நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.இணைப்பாளர் எஸ்.இன்பம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

-4-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here