சிறுபான்மையினருக்கு முன்னுரிமை-சுவிட்சர்லாந்து தூதுவர் உறுதியளிப்பு

0
309

image

 சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்கும் மனநிலையை இலங்கையில் ஏற்படுத்த தாம் உறுதுணையாக இருப்போம் என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் உறுதியளித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெதகோன் இன்று (புதன்கிழமை) வடமாகாண முதலமைச்சரை கைதடியில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பை தொடர்ந்து சுவிட்சர்லாந்து தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த முதலமைச்சர், இலங்கை அரசியல் ரீதியான தீர்வை எதிர்நோக்கி உள்ள நிலையில், இதுவரை காலமும் நாம் எப்படி இருந்தோம் என்பதை விட்டு, இனி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
இதுவரை காலமும் ஏதோ ஒரு விதத்தில் ஒருவரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனநிலை ஒரு இனத்திற்கு இருந்தது. அதனை விடுத்து நாங்கள் சேர்ந்து எவ்வாறு எமது செயற்பாட்டை கொண்டு போகவேண்டும் என சுவிஸ் தூதுவர் தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற முறைமை இருப்பினும், அவர்களுக்கான அதிகாரத்தில் வித்தியாசம் உள்ளது.
சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். அவர்களை மேலெல செய்யவேண்டும் என்ற மனநிலையை தமது நாட்டு மக்களும் அரசும் கொண்டுள்ளது. அதனை இலங்கையிலும் ஏற்படுத்த தாம் உறுதுணையாக செயற்படுவதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here