இராணுவம் மக்களுடன் இயல்பான செயற்பாடுகளை தொடர விரும்புகின்ற போதிலும், தம்மைப் பொறுத்தவரையில் இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும்.
அதற்கு பதிலாக பொலிஸார் அந்த பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தாம் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி மகேஷ் சேனநாயக்கவை சந்திக்கும் போது இதனை வலியுறு த்தவுள்ளதாக முதலமைச்சர் நேற்று ஊட கவியலாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் வடக்கில் உள்ளவர்கள் மீண்டும் போரொன்றை ஆரம்பிப்பார்கள் என்ற சந்தேகத்திலேயே, படைதரப்பை மத்திய அரசாங்கம் வடக்கில் நிலைக்கொள்ளச் செய்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்