வடக்கு மாகாணத்தில் இராணுவத்தால் தொடர்ந்தும் புத்த விகாரைகள் அடாத்தாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பும் வெளி யிட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தில் கனகராயன்குளம், மாங்குளம், பரந்தன், இரணைமடு, வட்டுவாகல், கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களில் புத்த சிலைகள் மற்றும் விகாரைகள் என்பன இராணுவத்தினரால் நிர் மாணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இதில் கொக்கிளாய் பகுதியில் தற்போது விகாரையயான்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
சிங்கள பெளத்தர்களின் குடிப்பரம்பல் இல்லாத இடத்தில்கூட எதற்காக பாதுகாப்பு படையினர் விகா ரைகளை அமைத்து வருகின்றனர்.இது சமயத்தை மாற்றும் நட வடிக்கை எனவும் ஐயம் கொள்ள வேண்டியுள்ளது.
இப்படியான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கோ அல்லது உறுதுணையாக இருந்து செயற்படுவதற்கோ அரசாங்கத்தின் தரப்பிலும் உதவி நடவடிக்கைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.இதைபோன்றே திருக்கேதீஸ் வரத்தில் புத்தர் ஆலயம் கட்டப்பட முயற்சிக்கப்பட்ட போதும் நாம் எதிர்ப்பு தெரிவித்தோம்.
எனவே வடக்கில் புத்தர் சிலைகள், விகாரைகள் என்பவற்றை அடாத்தாக அமைப்பதை தடுக்குமாறு மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அகில இலங்கை இந்து மாமன்றம் கேட்டுக் கொள்கிறது என இந்து மாமன்றம் தனது அறிக்கையில் கோரியுள்ளது.