தமிழகம் – திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் ஐவர் உண்ணாவிரதபோராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இவர்கள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யுமாறு கோரி இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் தங்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பவுல், ஜெயதரன் தம்பாபிள்ளை, அனந்தன் அந்தோனி, மற்றும் ராஜேந்திரன் கணேஸ், மற்றும் யுகப்பிரியன் செல்வரத்தினம் ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடடுள்ளனர்.
இதேவேளை, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.