ஐரோப்பாக் கிண்ணம் 2016 போட்டிகள் நடைபெறும் இடத்தில் மதுவுக்குத் தடை – பிரான்சு

0
277

imageஐரோப்பாக் கிண்ணம் 2016 கால்பந்து போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகிலும், ரசிகர்களின் பகுதிகளிலும் மதுவை தடை செய்ய விரும்புவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

மார்செய் நகரில் கால்பந்து அணிகளின் ரசிகர்களுக்கு இடையே மூன்று நாட்கள் நடைபெற்ற வன்முறைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதேவேளையில், ரஷியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆதரவாளர்கள் இன்னும் மோதல்களில் ஈடுபட்டால் அந்த இரு நாடுகளின் அணிகளும் போட்டியிலிருந்து விலக்கப்படும் என்று UFA அந்நாடுகளை எச்சரித்துள்ளது.

மார்செய்யில் நடைபெற்ற அதிக மோதல்களுக்கு “அல்ட்ராஸ்” என அறியப்படும் ரஷிய ரசிகர்களே குற்றம்சாட்டப்படுகின்றனர். சிறப்பாக ஒருங்கிணைவதற்கும், வன்முறை, அதிக தேசியவாத மற்றும் இனவாத உணர்வுக்கும் இவர்கள் பெயர் வாங்கியவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here