நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் மூன்று பேர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவர் பயணித்த படகு பழுது காரணமாக நடுக்கடலில் நின்றுள்ளது. இதனையடுத்து, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை அக்கரைப்பேட்டை மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் ஏன் வந்தார்கள் என்பது தொடர்பில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும் என்று கடலோர பாதுகாப்பு கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.