ஜெனிவா 32ஆவது கூட்டத் தொடர் திங்­கள் ஆரம்­பிக்­கி­றது!

0
544

Geneva UN_4ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 32ஆவது கூட்டத் தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­கின்றது. எதிர்­ வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இக்­கூட்டத்தொடரில் இலங்கை நிலை­வரம் தொடர்­பான வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­மையின் கார­ண­மாக இலங்­கைக்கு மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்க கூட்டத்தொட­ராக காணப்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் அர­சாங்­க­ததின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான குழு­வி­னரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். ஏ. சுமந்­திரன் தலை­மை­யி­லான குழு­வினர் ஜெனிவா நோக்கி பய­ண­மா­க­வுள்­ளனர்.

ஜெனிவாக் கூட்டத் தொடர் இன்று ஆரம்­பித்­தாலும் எதிர்­வரும் 29 ஆம் திக­தியே இலங்கை தொடர்­பான வாய்­மூல அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அந்­த­வ­கையில் எதிர்­வரும் 28 ஆம் திகதி ஜெனிவா பய­ண­மா­க­வுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எதிர்­வரும் 29 ஆம் திகதி உரை­யாற்­ற­வுள்­ள­துடன் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் தற்­போ­தைய நிலைமை மற்றும் அதன் நட­வ­டிக்­கைகள் குறித்து விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

அத்­துடன் இம்­முறை ஜெனிவாக் கூட்­டத்­தொ­டரில் நல்­லி­ணக்க செய­ல­கத்தின் செய­லாளர் மனோ தித்­த­வ­லவும் இலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­ள­வுள்ளார். மேலும் அர­சாங்க உயர் அதி­கா­ரிகள் மட்டக் குழுவும் இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­ள­வுள்­ளது.

ஜூன் மாதம் 29 ஆம் திகதி இலங்கை தொடர்­பான வாய்­மூல அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசெ­னினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அந்த அறிக்­கையில் நாட்டின் மனித உரிமை நிலைமை தொடர்­பாக தான் மேற்­கொண்ட மதிப்­பீடு குறித்து விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

கடந்த பெப்­ர­வரி மாதம் இலங்கை வந்­தி­ருந்த செய்ட் அல் ஹுசேன் இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் குறித்த மதிப்­பீட்டை செய்­தி­ருந்தார். அந்­த­வ­கை­யி­லேயே ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரின் இலங்கை குறித்த வாய்­மூல அறிக்கை மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமையும் என கூறப்­ப­டு­கின்­றது.

இம்­முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கு­வதா இல்­லையா என்ற விடயம் முக்­கியம் இடம்­பி­டிக்கும் என கூறப்­ப­டு­கின்­றது.

எனினும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து முன்­னெ­டுக்­கப்­படும் உள்­ளக விசா­ர­ணையில் எக்­கா­ரணம் கொண்டும் வெ ளிநாட்டு நீதி­ப­திகள் உள்­வாங்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்றும் உள்­நாட்டு நீதி­ப­தி­களை கொண்டே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அண்­மையில் அறி­வித்­தி­ருந்தார்.

இதே­வேளை சர்­வ­தேச நீதி­ப­தி­களை எக்­கா­ரணம் கொண்டும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் இணைத்­துக்­கொள்­ள­மாட்டோம் என்றும் உள்­ளக நீதி­ப­தி­க­ளைக்­கொண்டு விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சில மாதங்­க­ளுக்கு முன்னர் மிகவும் வலு­வான முறையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்­த­வ­கையில் அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாடு வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் ஜெனி­வாவில் முன்­வைக்­கப்­படும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்தக் கூட்டத் தொடரில் அர­சாங்­கத்தின் சார்­பிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்­பிலும் கலந்­து­கொள்­ள­வுள்ள பிர­தி­நி­திகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனை சந்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்­ளனர்.

இரண்டு தரப்­பி­ன­ருமே ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் தொடர்­பி­லேயே செய்ட் அல் ஹுசெ­னுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்­ளனர். குறிப்­பாக அர­சாங்க தரப்­பினர் தாம் சிறந்த முறையில் ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­தி­வ­ரு­வ­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் தெரி­விக்­க­வுள்­ளனர்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் குறிப்பிடத்தக்களவு அதிருப்தியை வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயிட் அல் ஹுசைன் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் முடிவெடுப்பது இலங்கையினுடைய தீர்மானமாகும் என்று வலியுறுத்தியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here