உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து மிகவும் பிரபலம் பெற்றது ஐரோப்பிய கோப்பை போட்டியாகும் (European Championship).
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் இந்தத் தொடரில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளும்.
உலகக் கோப்பையை போலவே இந்தத் தொடரும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
1960 ஆம் ஆண்டு இந்தப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு போலந்தும், உக்ரைனும் இணைந்து போட்டியை நடத்தியது. இதில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் பெற்றது.
இம்முறை 15 ஆவது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸில் இன்று நள்ளிரவு ஆரம்பமாகின்றது.
ஜூலை 10 ஆம் திகதி வரை ஒரு மாத காலம் இந்த கால்பந்துத் திருவிழா நடைபெறுகிறது.
மொத்தம் 54 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. ஐரோப்பிய கால்பந்து தொடரை பிரான்ஸ் நடத்துவது இது 3 ஆவது முறையாகும். அறிமுக தொடர் 1960 ஆம் ஆண்டிலும், அதன் பின்னர் 1984 ஆம் ஆண்டிலும் பிரான்சில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
எப்போதும் இல்லாத வகையில் இம்முறை 24 நாடுகள் பங்கேற்கின்றன.
இவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான ஸ்பெயின் டி பிரிவில் உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 16 அணிகள் மோதும். லீக் சுற்றில் 6 பிரிவுகளிலும் 3 ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளின் புள்ளிகள் அடிப்படையில் மீதமுள்ள 4 அணிகள் தெரிவாகும்.
இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு செயின்ட் டெனிஸ் நகரில் உள்ள ஸ்டேடு டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், ருமேனியாவுடன் மோதுகின்றது.
உலகின் சிறந்த கால்பந்து வீரரான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்த சீசனில் 51 ஆட்டத்தில் 51 கோல்கள் அடித்துள்ளார்.
ஜெமர்மனியின் தாமஸ் முல்லர், பிரான்ஸின் பவுல் போகாபா, போலந்தின் லெவர் ஸ்டோஸ்கி, வேல்ஸின் காரத் பாலே, சுவீடனின் இப்ராகிமோவிக், ஸ்பெயினின் இனியஸ்டா, இங்கிலாந்தின் ரூனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்தப்போட்டியில் முத்திரை பதிக்க காத்திருக்கின்றனர்.
தாயக நேரத்துடன் போட்டி அட்டவணை இதோ…