வட மாகாணத்தில் யாரால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என இராணுவப் பேச்சாளர் எதிர்பார்க்கின்றார் என கேள்வி எழுப்பிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
, இராணுவம் இருப்பதால் தான் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்களை பாதுகாக்கவே அங்கு இராணுவ முகாம்கள் அகற்றடாது உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்திருந்த கருத்திற்கு பதில் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா, மன்னார்,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான துறைசார் கூட்டம் வவுனியா உதவி உள்@ராட்சி ஆணையாளர் அலுவல கத்தில் நேற்று இடம்பெற்றது.
அதில் பங்கேற்ற முதலமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,
எம்முள் சிலரின் கடந்த கால வாழ்க்கை முறையும்; தற்கால நடை முறைகளும் சற்று வேறுபட வேண்டும். வட மாகாணசபை வர முன்னிருந்த காலம் வித்தியாசமானது. இப்பொழுது மக்களே மக்களை ஆளுங் காலம். ஆகவே நாங்கள் யாவரும் எமது மக்கள் சார்பில் கடமையாற்றுகின்றோம் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. மக்கள் என்று கூறும் போது உங்கள் ஒவ்வொருவரினதும் குடும்பங்களும் உற்றார் உறவினர்களும் கூட அச்சொற்பதத்தினுள் அடங்குவர். எங்கோ இருக்கும் மத்திக்கோ சுயநலத்துடன் எம்மை அண்டப் பார்க்கும் மத்தியின் அமைச்சர்களுக்கோ மற்றையவர்களுக்கோ நாங்கள் ஜால்ரா தாளம் போட வேண்டிய காலத்தை நாம் இப்பொழுது தாண்டி விட்டோம்.
வெகு விரைவில் அரசாங்க அதிபர்கள்கூட எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட இருக்கின்றார்கள். எமது மக்களுக்கு எது நன்மை பயக்கும், மத்தியின் எந்தெந்த உள்ளீடல்கள் எமக்குத் தீமை பயக்கும் என்பதை எல்லாம் நாம் யாவரும் நன்கு ஆராய்ந்து, உணர்ந்து செயற்பட வேண்டிய காலம் இது. உதாரணத்திற்கு இராணுவத்திற்குப் பயந்து காடுகளையோ, வீடுகளையோ, காணிகளையோ அவரிக ளிடம் கையளித்திருந்தீர்களானால் அது நீண்ட காலப் பாதிப்பை எம் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
காணிகளைக் கையேற்கும் சட்டத்தின் கீழ் பொது நோக்கத்திற்காகக் காணிகளைச் சுவீகரிக்கலாம் என்பது இராணுவ முகாம் கட்டுவதற்கும் முடியும் என்று சில அலுவலர்கள் தீர்மானித்து போர் முடிந்த பின்னர் கூட இராணுவம் கேட்டவாறே அவற்றைக் கொடுத்தும் வந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு இராணுவத்தினரின் தோழமையும் உதவிகளும் கிடைத்தது உண்மைதான். ஆனால் அவ்வாறு செய்ததால் நாம் எமது மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டோம் என்பதை மறக்கக்கூடாது.
இப்பொழுது வரும் போது தான் பத்திரிகையில் இராணுவப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர இராணுவத்தை வடமாகாணத்தில் இருந்து அகற்றினால் அசம்பாவிதங்கள் நடைபெறும் என்று கூறியிருப்பதைப் பார் த்தேன். வடமாகாணத்தில் யாரால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்று தெரியவில்லை. இராணுவம் போர் முடிந்து 7 வருடங்களின் பின்னர் இங்கு தரித்து நிற்பதே எமது பிரச்சினை.
எங்கள் காணிகளை எடுத்துள்ளனர்;, வீடுகளை எடுத்துள்ளனர,;; வளங்களைப் பாவிக்கின்றனர்;, வணிகத் தொழில்களை எடுத்துள்ளனர்;, எமது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அசம்பாவிதங்கள் இராணுவம் இருப்பதால்தான் ஏற்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் வடமாகாணத்தை விட்டுப் போய்விட்டால் பொலிஸார் எமது பாதுகாப்பைப் பார்த்துக் கொள்வார்கள்.
அசம்பாவிதங்களும் நடைபெற மாட்டாது என்ற கருத்தை இங்கு கூற விரும்புகின்றேன். எமது அலுவலர்களில் சிலர் இராணுவத் திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுப டாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல.
உங்கள் ஒவ்வொருவரின் பழைய கால நடைமுறைகள், உங்கள் பழைய சிநேகங்கள், நேயங்கள், குறைபாடுகள் யாவையும் அப்போதைக்கப்போது எமக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றை வைத்து உங்களைப் பழிவாங்கவோ இம்சைப்படுத்தவோ நாங்கள் முனையவில்லை. புதிய சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றி மக்கள் சார்பாக நடந்து கொள்ளுங்கள் என முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.