மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க புதிய அரசாங்கத்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், அதைத் தவறவிட வேண்டாம் எனவும், நேற்று இது குறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியத் தலைமை நிர்வாகி அனந்தபத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 18ம் திருத்தச் சட்டம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு பரந்த அதிகாரத்தை அளிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன திரும்பப் பெறப்பட வேண்டும்.
பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பாளர்கள் மீதான அடக்கு முறைகள், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துமாறு, மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரல் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விசாரணைகளுக்கு புதிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அனந்தபத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.