வடக்கில் மக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்பகுதியில் இராணுவ முகாமில் இருந்த ஆயுதக் கிடங்கு வெடித்ததில் பல மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த பிரதேசம் மிக மோசமாக பாதிக்கபட்டிருகிறது. உண்மையாகவே நாங்கள் பாதிக்கபட்ட மக்களுக்காக வருந்துகிறோம்.
இந்த இராணுவ முகாம் அமைக்கபட்ட போது அப்பிரதேசத்தில் இருந்த பாராளுமன்ற உருப்பினர் தினேஸ் குனவர்த்தன இந்த இராணுவ முகாமைமக்கள் மத்தியில் அமைக்க வேண்டாம் என கூறியிருந்தார் எனவும் அதை மீறி அமைத்ததால் தான் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற சொன்ன பொழுது தினேஸ் குணவர்த்தன முளுமையாக எதிர்திருந்தார்.
ஆனால் வடக்குமாகாணத்தில் எத்தனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று இரண்டு முகாம்கள் அல்ல இங்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் மாவட்டத்திலும் எத்தனை இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவ முகாம்கள் இருந்தால் அங்குn வடிபொருட்கள் இருக்கும் என்பது தவிர்க்க முடியாதது. ஆகவே இங்குள் முகாம்களில் இவ்வாறு அசம்பாவிதங்கள் தவறுதலாக இடம்பெற்றால் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட நேரிடும்.
எனவே இங்குள்ள முகாம்கள் மக்கள் மத்தியில் இருக்க கூடாது. என்பதை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நூற்;றுக்கணக்கான முகாம்கள் அகற்றபட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிற்கு மாற்றி அமைக்க வேண்டும். எனவே இதை அனைவரும் வலியுறுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்