யாழ்ப்பாணத்தில் மூன்று முக்கிய விடயங்களை வலி யுறுத்தி இன்றையதினம் பாரிய கவனயீர்ப்பு போராட்டமும் கை யெழுத்து வேட்டையும் இடம்பெறவுள்ளது.இவ் கவனயீர்ப்பு போராட்ட மானது சோசலிஸ கட்சி மற்றும் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் யாழ் பிரதான பேருந்து நிலையத்தின் முன்பாக இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று இடம் பெறவுள்ள இவ் போராட்டம் தொடர்பாக ஏற்பாட்டு குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தமிழ் மக்களது பல பிரச்சனைகள் தொடர்பாக இன்றுவரை அரசாங்கம் தீர்க்கமான ஓர் முடிவை அல்லது தீர்வை பெற்று தரவில்லை.
குறிப்பாக கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மனிதவுரிமை செயற்பாட்டாளராக இருந்த லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் காணமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் தெளிவான பொறுப்பு கூறலை வழங்கவில்லை.
இதேபோன்று கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளிலே தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் காணாமல் போனோர் தொடர்பாக எதுவிதமான நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக இது தொடர்பில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட் டுள்ள போதும் அதனாலும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அர சாங்கம் உறுதியானதும் தெளி வானதுமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத் தியே இவ் கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து போராட்டத்தை நடத்துவதாக அவர்கள் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ் போராட்டத்திற்கு சகல மக்களையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.