கல்முனை கொலை வழக்கு; மரணதண்டனை விதித்து தீர்ப்பு

0
579

jaffna-court2003 ஆம் ஆண்டு கல்முனை மாளிகைக்காட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின்
முதலாவது எதிரிக்கு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் கீழ் கல்முனை மேல்நீதிமன்றில் இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பினை இன்று வழங்கியமை விசேட அம்சமாகும்.

குறிக்கப்பட்ட வழக்கில் இறந்துபோன சின்னலெப்பை அலாவுதீனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது மனைவி கலந்தர் ரூபியாவை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தார்.

எனினும் இந்த குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாவது எதிரியான செல்லத்துரைக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமையால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சின்னலெப்பை அலாவுதீன் இறந்தபோது அவரது மனைவியான கலந்தர் ரூபியா அதே வீட்டில் இருந்தமையை சுட்டிக்காட்டிய நீதிபதி எம்.இளஞ்செழியன்,தூக்கில் தொங்கியதால் மரணம் சம்பவிக்கவில்லை என சட்டவைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் விசேடமாக சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் குறிக்கப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சியான வைத்திய கலாநிதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இந்த மரணம் கத்திக் குத்தால் ஏற்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கத்திக் குத்தால் இந்த மரணம் ஏற்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, இறந்தவரின் மனைவியான கலந்தர் ரூபியா கொலை செய்ததை நியாயமான அளவு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானதை அடுத்து முதலாவது எதிரிக்கு நீதிபதி எம்.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here