முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பேன்; முதலமைச்சர் விக்கி !

0
264

vikkiதமிழ் மக்­களின் உரி­மைகள் விவ­கா­ரங்­களை சிங்­கள அர­சியல் தலை­வர்கள் இன­வாதக் கண்­கொண்டு நோக்கக் கூடாது. தமி­ழக முதல்­வ­ரு­ட­னான தொடர்­பு­க­ளுக்கு மத்­தி­ய­ரசின் அனு­மதி தேவை­யில்லை. ஆகவே காலத்தின் தேவைக்கு ஏற்ப தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி
தாவை சந்­திப்பேன் என வட மாகா ண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஷ்­வரன் தெரி­வித்தார்.
தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை அறிந்­து­கொண்டு அதற்­கேற்ப அர­சி­ய­ல­மைப்பு தீர்வு திட்ட யோச­னையை வட­மா­காண சபை முன்­வைத்­துள்­ளது. ஆனால், தமிழ்த் தேசியக்
கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தில் முன்­னின்று செயற்­ப­டாமை வேத­னை­ய­ளிப்­ப­தா­க­வுள்­ளது என்றும் குறிப்­பிட்டார்.
தமி­ழக முதல்­வ­ரு­ட­னான சந்­திப்பு மற்றும் உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரங்கள் குறித்து தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஷ்­வரன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,
தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தா­வு­ட­னான சந்­திப்பு தொடர்பில் தென்­னி­லங்­கையில் பல்­வேறு இன­வாத பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அவ்­வா­றான சந்­திப்பு குறித்து இது வரையில் உறு­தி­யான தீர்­மானம் எடுக்­கப்­பட வில்லை. ஆகவே நாங்கள் இன­வா­தத்தை பரப்­பு­வ­தாக கூறும் தென்­னி­லங்கை அர­சியல் தலை­வர்கள் உண்­மையை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்­களின் உரி­மைகள் உரிய வகையில் வழங்­கப்­பட்­டி­ருந்தால் நாங்கள் ஏன் கோஷம் எழுப்ப போகிறோம் ?
தமி­ழக முதல்­வரை சந்­திக்க மத்­தி­ய­ரசின் அனு­ம­தியை பெற்றுக் கொள்ள வேண்­டிய தேவை கிடை­யாது . ஏதேனும் ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­திடும் பட்­சத்தில் அதனை அறி­விக்க வேண்­டிய தேவை உள்­ளதை நாம் அறிவோம். எமது உரி­மைகள் குறித்து பேசும் போது அதனை இன­வா­த­மாக சித்­த­ரிப்­பது எந்த வகையில் நியா­ய­மாகும் ? என்­பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மான இரா­ணுவம் வடக்கில் நிலை கொண்­டுள்­ளது. இரா­ணு­வத்­தி­னரின் குடும்­பங்­க­ளுக்கு வடக்கில் வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இன்றும் சிங்­கள குடி­யேற்­றங்கள் அசா­தா­ரண முறையில் வடக்கில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
ஆனால், உண்­மை­யாக பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் காணி­களை விடு­விப்­பதில் பல்­வேறு நெருக்­க­டிகள் காணப்­ப­டு­கின்­றன. இரா­ணுவ முகாம்­க­ளுக்கு அருகில் பாது­காப்­பாக மக்கள் வாழ முடியும் என கருத முடி­யாது. இவ்­வா­றான நடை­முறை பிரச்­சி­னை­களைப் பேசும் போது அதனை இன­வா­த­மாக தென்­னி­லங்­கையில் பரப்­பப்­ப­டு­கின்­றது. 1958 மற்றும் 83 களில் தென்­னி­லங்­கையில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. அப்­போது ஏரா­ள­மான தமி­ழர்கள் விரட்டி அடிக்­கப்­பட்­டனர். அவ்­வாறு விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மீண்டும் அங்கு செல்ல வாய்ப்­புகள் அளிக்­கப்­பட்­டதா ?
எனவே, இன­வாதம் என கூறிக்­கொண்டு தமிழ் மக்­களின் உரி­மை­களை மழுங்­க­டிக்க முற்­ப­டு­வது ஏற்­பு­டை­ய­தல்ல . இதனால் தான் வட­மா­காண சபை அர­சாங்­கத்தின் உத்­தேச புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை உள்­ள­டக்­கிய யோசனை திட்­டத்தை முன் வைத்­துள்­ளது. இந்த திட்­டத்­தினை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­திற்கு வழங்­கி­யுள்ளோம். வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் கூட அந்த திட்டத்தை ஆதரித்துள்ளார். கூட்டமைப்பு செய்ய வேண்டியதை வட மாகாண சபை செய்துள்ளது. இதனை அரசாங்கத்திடம் வலியுறுத்தி நியாயமானதும் கௌரவமானதுமான தீர்வுத் திட்டத்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here