பொலிஸ் வாகனம் மோதி இளைஞனின் கால் முறிந்தது!

0
196

accident_06928000_94589900வவுனியா தாண்டிக்குளம் பகுதியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் வாகனம் மோதியதில், இளைஞன் ஒருவருடைய கால் முறிந்து சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபரான தேசபந்துவின் வாகனம், தாண்டிக்குளம் சந்தியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞனொருவரை மோதியது. இதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் வலது காலில் மூன்று இடங்களில் முறிவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு இன்று காலையே சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இளைஞன், தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here