கிருஷ்ணகிரியில் கொடூர விபத்து: 18 பேர் பலி;30 பேர் காயம்!

0
226

accidentகிருஷ்ணகிரி அருகே மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, பார ஊர்தி மற்றும் ஒரு சிற்றுந்து ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளது. இதில் சிற்றுந்து மற்றும் பேருந்தில் வந்தவர்கள் பலர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினர்.

தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பார ஊர்தியில் டயர் காற்றுபோனதால் தாறு மாறாக ஓடி எதிரே வந்த பேருந்து மற்றும்  சிற்றுந்து மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர், அப்பகுதி பொதுமக்களும் அவர்களுக்கு உதவியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்தில் 18 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட ஆட்சியாளரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here