முல்லையில் முச்­சக்­க­ர­வண்டி விபத்து: குடும்பஸ்தர் பலி!

0
480

aValvai-accident-1முச்சக்கரவண்டி மாட்­டுடன் மோதி விபத்­துக்­குள்­ளான நிலையில் யாழ். போதனா வைத்­தி­ய­சாலையில் சிகிச்சை பெற்­று­வந்த நப­ரொ­ருவர் சிகிச்சை பல­னின்றி மர­ண­ம­டைந்­துள்ளார்.

முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வ­ளையை சேர்ந்த ஆறு­முகம் ரம­ண­குமார் (வயது 34) எனும் இரண்டு பிள்­ளை­களின் தந்­தையே இவ்­வாறு மர­ண­ம­டைந்­த­வ­ராவார்.
இவ் விபத்து சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
குறித்த நபர் கடந்த மாதம் முதலாம் திகதி முள்­ளி­ய­வ­ளையில் இருந்து குமு­ழ மு­னைக்கு முச்சக்­க­ர­வண்­டி­யொன்றில் நெல் ஏற்றிச் சென்று கொண்­டி­ருக்கும் போது வீதியின் குறுக்­காக சடு­தி­யாக வந்த மாடு­க­ளோடு மோதுண்­டதில் முச்­சக்­க­ர­வண்டி தடம்­பு­ரண்டு அரு­கி­லுள்ள மரத்­துடன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது.
இந்­நி­லையில் படு­கா­ய­ம­டைந்த குறித்த நபர் மாஞ்­சோலை ஆதார வைத்­தி­ய­சாலையில் அனு­ம­திக்­கப்­பட்டு கடந்த மாதம் நான்காம் திகதி யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக மாற்­றப்­பட்டார்.
இத­னை­ய­டுத்து, யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் ஒரு மாத­ கா­ல­மாக சிகிச்சை பெற்றுவந்­தி­ருந்த நிலையில் சிகிச்சை பல­னின்றி நேற்று முன்­தினம் குறித்த நபர் மர­ண­ம­டைந்­துள்ளார். இவரது மரண விசா­ரணையை யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிறேம்குமார் மேற்-கொண்டிருந்ததையடுத்து சடலம் உறவி-னர்க-ளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here