பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு நேற்று மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்சில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
முக்கிய நதியான Seine வேகமாக நிரம்பி வருவதால் பதட்டம் அதிகரித்துள்ளது.
போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் சிறு படகுகள் மூலமே மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
பாரிசில் வெள்ள நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல தொடருந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பாரிசில் செஞ்சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.