யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.