யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு அதனை நினைவுகூரும் நிகழ்வொன்று யாழ். நூலகத்தில் நேற்று இடம்பெற்றது.
யாழ். பொது நூலக வாசகர் வட்டத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ். மத்திய இலவச வாசகசாலையின் ஸ்தாபகர், காலஞ்சென்ற க.மு.செல்லப்பா மற்றும் யாழ். நூலகம் எரிவதைக் கேள்வியுற்ற சந்தர்ப்பத்தில் உயிர்நீத்த அருட்திரு. தாவீது அடிகளார் ஆகியோர் இதன்போது நினைவுகூரப்பட்டனர்.
இந்த நிகழ்வில் நூலக ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.