யாழ்.மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 647 தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரத்து 581 ஏக்கர் காணிகள் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையில் உள்ளதாக யாழ்.மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அந்த புள்ளி விபரத்தில் மேலும் குறிப்பிடுகையில்
யாழ்.மாவட்டத்தில் உள்ள 9 ஆயிரத்து 205 காணி உரிமையாளர்க ளின் 6,239 ஏக்கர் காணி இராணுவத்தினர் பாவனையிலும் 357 காணி உரிமையாளர்களின் 318 ஏக்கர் காணி கடற்படையினர் பாவனையிலும் 85 காணி உரிமையா ளர்களின் 23 ஏக்கர் காணி பொலிஸாரின் பாவனையிலும் உள்ளது.
அத்துடன் யாழ்.மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயம் தவிர்ந்த ஏனைய பிரதேசசெயலர் பிரிவுகளிலும் உள்ள 172 காணி உரிமையாளர்களின் வீடுகள் உள்ளடங்கலாக 61 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம், கடற்படையினர் மற்றும் பொலிஸார் கையகப்படுத்திவைத்துள்ளனர்.
அந்தவகையில் 24 வீடுகள் உள்ளடங்கிய 10 ஏக்கர் காணியை இராணுவத்தினரும் 69 வீடுகள் அடங்கிய 13 ஏக்கர் காணியை கடற்படையினரும், 79 வீடுகள் அடங்கிய 37 ஏக்கர் காணியினை பொலிஸாரும் கையகப்படுத்தி வைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.