யாழ் . வரும்போது கட்டிடங்கள் எல்லாம் இருக்கும் ஆனால் மனிதர்களை காண மாட்டீர்கள்: யாழ் ஆயர்

0
445

                      (எரிமலைக்காக நெதர்லாந்தில் இருந்து தீபன்)
justin-bernard-gnanapirakasam
யாழ்ப்பாணத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர் , யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நவீன தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை யாழில் நிறுவ முன் வாருங்கள் .
இவ்வாறு புலம் பெயர் தமிழர்களிடம் அழைப்பு விடுத்தார் யாழ் ஆயர் மேதகு ஜஸ்ரின் பெர்னாட் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை.

சனிக்கிழமை பெல்ஜியத்தில் உள்ள பனு மாதா தேவாலயத்தில் நெதர்லாந்து பனு மாத ஆசிய யாத்திரீகர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைப் பெற்ற இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் பனுமாதா திருத்தலம் நோக்கிய 31 ஆவது திருப்பயண ஆராதனை வழி பாட்டிற்காக பல்வேறு நாடுகளிலும் இருந்து வருகை தந்திருந்த நுற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இந்த அழைப்பை விடுத்தார் .

அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது

படு மோசமாகப் போகின்றது யாழ்ப்பாணம் முதலாவது அவர்களுக்கு வேலையில்லாத பிரச்சினை உள்ளது . இதை நான் திரும்ப திரும்ப இங்கு வந்து செல்பவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளேன் .
அதை எவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை .

பலர் படித்து விட்டு பல்கலைக்கழகம் போக முடியாமல் சும்மா இருக்கிறார்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கவேண்டும் .
இது புலம் பெயர் தமிழர்களின் கடமையாக உள்ளது .

யாழில் ஆடைகள் தைப்பதிற்கு தொழிற்சாலைகள் நிறுவ வேண்டாம் எங்களுக்கு அவைகள்
தேவையில்லை.

தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் குறிப்பாக தொலைபேசி செய்யும் தொழிற்சாலைகள் அவற்றை கொண்டு வந்து யாழில் நிறுவுங்கள் .
எங்களுடைய இளைஞயர்கள் , யுவதிகளுக்கு திறமைகள் உள்ளன . அவர்கள் அதை செய்வார்கள் .
இவ்வாறான திட்டங்களை யாரவது யோசித்து செய்ய முன்வந்தீர்கள் என்றால் எமது இளைஞயர்களின் எதிர்காலம் நல்லதாக உருவாகும் .

வடக்கு கிழக்கில் அதுவும் யாழில் தான் பிரச்சினைகள் அதிகரித்து செல்கின்றது. அங்கு வாள் வெட்டு அதிகரித்து விட்டது .யாழ் . ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டுகின்றார்கள் என்றால் என்ன நிலைமை என்று யோசித்துப்பாருங்கள் .
.bernad 3
.bernad
bernad 2

கல்வியில் முன் நிலையில் இருந்த நாங்கள் இப்போது பின்தள்ளிப் போய்விட்டோம் .
ஏன் வாள் வெட்டும் கஞ்சப் பாவனையும் ஆக்கிரமித்து விட்டன.

எங்களுடைய நிலைமைகளை நீங்கள் உணரவேண்டும் . மற்றவர்களைப் பேசி எந்த பிரியோசனமும் இல்லை.

எமது இளைஞயர்களை ஏதாவது ஒரு வழிக்கு கொண்டு செல்லவில்லையோ நீங்கள் யாழ்ப்பாணத்தை இழந்து விடுவீர்கள் .நீங்கள் யாழ்ப்பாணம் வந்து பார்க்கும் போது கட்டிடங்கள் எல்லாம் இருக்கும் ஆனால் மனிதர்களை காண மாட்டீர்கள்.- என்றார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here