பிரான்சில் அமல்படுத்தவிருக்கும் புதிய தொழிலாளர் சட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டேன் என பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த சீர்திருத்த திட்டங்களை அரசு நிறைவேற்றாத காரணத்திற்காக கடந்த மார்ச் 31ம் திகதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக, பிரான்சில் பெட்ரோல் விநியோகம் பாதிப்பு, போக்குவரத்து பாதிப்பு என போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன, அதுமட்டுமின்றி பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்துவரும் வன்முறை சம்பவங்களும் அதிரித்துள்ளன.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே கூறியுள்ளதாவது, புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர் சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள், எச்சரிக்கைகள் போன்றவற்றினை கண்டு இந்த புதிய சட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்.
புதிதாக வரவிருக்கும் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு நன்மை தரக்கூடியவையாக இருக்கும், போராட்டத்தில் தீவிரவமாக ஈடுபட்டு வந்த 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 15 பொலிசார் காயமடைந்துள்ளனர்.
மேலும் பாரிஸில் நிலவியுள்ள பெட்ரோல் விநியோக பாதிப்பு குறித்து சில சங்கங்களுடன் பேச்சுவார்தை நடத்தியதில் அது சுமூகமாக முடிந்துள்ளது என கூறியுள்ளார்.
பெட்ரோல் விநியோக பாதிப்பு குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை பாரிஸில் பெட்ரோல் விநியோக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதில் குறிப்பாக பிரான்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெட்ரோல் பாதிப்பு சற்று தடுமாற்றத்தை சந்தித்துள்ளது,
ஏனெனில் பாரிஸில் இருந்து லண்டன் நாட்டிற்கு அவர்களது விமானம் பயணிப்பது குறிப்படத்தக்கது, பிரான்சில் 20 சதவீத பெட்ரோல் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த தொழிலாளர் போராட்டத்தில் 300,000 மக்கள் பங்கெடுத்துள்ளனர், ஆனால் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில் 153,000 பேர் என தெரிவித்துள்ளனர்.