காணாமல்போன மகனுக்கு ஏழாண்டுகள் கடந்த நிலையில் இறுதிக்கிரியை!

0
234

showImageInStory
காணா­மல்­போன யோக­ராஜா சதீஸ்­ரூபன் என்ற மக­னுக்கு ஏழாண்­டுகள் கடந்த நிலையில் தாயா­ரினால் இறு­திக்­கி­ரி­யைகள் கடந்த 19ஆம் திகதி கிளி­நொச்சி அம்­பாள்­குளம் பகு­தி­யி­லுள்ள வீட்டில் வைத்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

குறித்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

யோக­ராஜா சதீஸ்­ரூபன் என்­பவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வலை­ஞர்­ம­டத்தில் அவ­ரு­டைய தாயாரைச் சந்­தித்து ஒரு தொகைப் பணத்­தையும் அவ­ரி­ட­மி­ருந்து பெற்று இரா­ணுவக் கட்­டுப்­பாட்டுப் பகு­திக்குள் செல்­லப்­போவ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக அவர் மீளத் திரும்­ப­வில்லை என குறித்த நபரின் தாயா­ரினால் காணா­மல்­போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களில் பதி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் அண்­மையில் முள்­ளி­வாய்க்கால் ஆறாம் ஆண்டு நிறைவை முன்­னிட்டு இணை­யத்­த­ளத்தில் புகைப்­ப­டங்கள் பதி­வேற்­றப்­பட்­டி­ருந்­தன. அத்­த­கைய படங்­களில் ஒன்றில் காணா­மல்­போன சதீஸ்­ரூபன் இறந்த உடல்கள் மத்­தியில் சட­ல­மாகக் காணப்­ப­டு­வதை குறித்த நபரின் உறவினர் ஒருவர் பார்த்­துள்ளார். இத­னை­ய­டுத்து அந்த உற­வி­னரால் குறித்த நபரின் தாயா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­னைத்­தொ­டர்ந்து தாயா­ரினால் மகனின் புகைப்­படம் வீட்டில் வைக்­கப்­பட்டு உற­வி­னர்கள் அழைக்­கப்­பட்டு கடந்த 19ஆம் திகதி இறு­திக்­கி­ரி­யைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை 8ஆம் நாள் நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here