அள­வெட்­டியில் தற்­கொ­லைக்கு முயன்ற மாணவன் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழப்பு

0
348

Covered dead body of a person in the morgue with a tag attached to the toe

தற்­கொ­லைக்கு முயன்ற மாணவன் ஒருவர் உற­வி­னர்­களால் மீட்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் சிகிச்சை பல­னின்றி நேற்­றைய தினம் உயி­ரிழந்­துள்ளார்.

அள­வெட்டி தெற்கை சேர்ந்த யதீஸ் தேனி­னியன் எனும் தரம் 6 இல் கல்வி கற்று வந்த மாண­வனே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

கடந்த 17 ஆம் திகதி மாலை வீட்டின் பின்­பு­ற­மாக உள்ள தற்­கா­லிக கொட்­ட­கைக்குள் சென்ற குறித்த மாணவன் தூக்­கிட்டு தற்­கொலை செய்ய முயன்­றுள்ளார். இதன் போது குறித்த மாணவன் அவ­ரது சகோ­த­ரனால் மீட்­கப்­பட்டு தெல்­லிப்­பழை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

இதன் பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக சம்­பவ தின­மன்று இரவு எட்டு மணி­ய­ளவில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவன் சிகிச்சை பல­னின்றி நேற்று காலை 4 மணி­ய­ளவில் உயி­ரி­ழந்­துள்ளார்.

குறித்த மாண­வனின் மரண விசா­ர­ணையை யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் திடீர் மரண விசா­ரணை அதி­காரி டாக்டர் நவசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்ததையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here