ஈழத் தமிழரின் சுதந்திர வாழ்விற்கு இந்திய மத்திய அரசின் கவனத்தைத் திருப்புவதற்கான வினைத்திறனுடன் கூடிய அழுத்தத்தை ஏற்படுத்துவீர்கள் என்ற தளராத நம்பிக்கையுடன் தமிழர்கள் நாம் காத்திருக்கிறோம். என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, 6 ஆவது தடவையாக தமிழக முதல்வராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலிதா ஜெயராம் அவர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தியின் முழுவிவரம் வருமாறு:-
21.05.2016
மாண்புமிகு தமிழக முதல்அமைச்சர் அவர்கட்கு!
வணக்கம்!
தமிழக சட்டசபைக்காக ஆறாவது தடவையாக முதலமைச்சராகத் தெரிவானதில் பிரான்சு வாழ் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்ததாக மாநில அரசாக இருந்து தற்துணிவுடன் சட்டமன்றத்தில் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினீர்கள். தங்களது தார்மீக செயற்பாடு ஊடாக உலகத்திற்கும் இந்திய மத்திய அரசிற்கும் தமிழ் மக்களின் அவலநிலையை கவனத்திற்கு எடுத்துச் சென்றீர்கள்.
ஈழத் தமிழரின் சுதந்திர வாழ்விற்கு இந்திய மத்திய அரசின் கவனத்தைத் திருப்புவதற்கான வினைத்திறனுடன் கூடிய அழுத்தத்தை ஏற்படுத்துவீர்கள் என்ற தளராத நம்பிக்கையுடன் தமிழர்கள் நாம் காத்திருக்கிறோம்.
தாய் ஒருவருக்குத்தான் பிள்ளைகளின் தேவை தெரிந்து கொடுப்பதிலும் செயற்படுவதிலும் மகிழ்வுகொள்ள முடியும். தமிழர்களின் தாயாகத் தங்களை நாம் பார்க்கிறோம்.
உங்களின் வெற்றிக்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
பொறுப்பாளர்