வரலாறுகள் ஆவணப்படுத்தல் தமிழ் இனத்திற்கு மிகவும் முக்கியம். அதிலும் வடக்கு, கிழக்கு தாயக விடு தலைப் போராட்டம் தொடர்பான போர்க் கால கலை இலக்கியங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் கூறினார்.
மகிழடித்தீவு கண்ணகையம்மன் ஆலய பச்சைவெட்டு திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மகிழடித்தீவு சிவநெறிக்கழகத்தின் முயற்சியால் சித்தி விநாயகர் கண்ணகையம்மன் புகழ்பாடும் பத்துப் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீட்டு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஆலயங்களின் மகிமை, வரலாறு கூறும் இசைபாடல்கள் ஆலயங்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் பெரும்பங்கு செலு த்துகிறது. தமிழர்களின் பாரம்பரிய கலை வரலாறுகள் என்பன இலக்கியங்களாகவும் நாடகங்களாகவும் நாட்டுக் கூத்துக்களாகவும் கவிதைகளாகவும் நம்முன்னோர் படைத்துள்ளனர். அதை நாம் இன்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பேணி வருகின்றோம். மட்டக்களப்பு மண்வாசனையை நோக்கும்போது நாட்டுக் கூத்துக்கலை எமது பூர்வீக வரலாற்றையும் தமிழர்களின் வீரத்தையும் விவேகத்தையும் பாரம்பரிய ஒழுக்க விழுமியங்களையும் பறைசாற்றும் விதத்தில் அமைந்திருந்ததை நாம் மறக்கமுடியாது.
பாரதப்போர், கம்பராமாயணம், வீரபாண்டியகட்ட பொம்மன் மற்றும் பல தமிழ் சிற்றரசர்களின் வரலாறுகள், வடமோடி, தென்மோடி என உருவாக்கி இருந்தனர். அவர்களின் படைப்பை இன்று நாம் கலைகளாக தொடர்ந்தும் பேணி வருகின் றோம்.
இதேபோலவே எமது வடக்கு, கிழக்கு தாயக விடுதலைப் போராட்டத்தின் தியாக வரலாறுகள் போர்க்கால இலக்கியங்களாக வடக்கு, கிழக்கு படைப்பாளர்கள் எதிர்காலத்தில் உண்மைகளை கலைகளாகவும் நாடகங்களாகவும் கவிதைகளாகவும் இசைப்பேழைகளாகவும் புத்தகங்களாகவும் காவியங்களாகவும் உருவாக்க முன்வர வேண்டும். நான் இவ்வாறான விடயங்களை கவிதையாகவும் பாடல்களாகவும் ஏற்கனவே படைத்துள்ளேன். தற்போது முள்ளிவாய்க்கால் ஏழாம் ஆண்டு நினைவாக முள்ளிவாய்க் கால் நினைவேந்தல் கண்ணீர் காவியம் இறுவட்டாக கடந்த 18 மே 2016 கிளிநொச்சியில் வெளியிட் டேன்.
இது முள்ளிவாய்க்கால் அவலத்தை ஆவணமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதே போல் எமது கடந்தகால போராட்ட வரலா றுகளும் தியாகங்களும் உண்மைகளும் இலக்கியங்களாக படைக்கப்பட வேண்டும். இதற்கு வடக்கு, கிழக்கு தாயக படைப்பா ளிகள் துணிவுடன் முன்வர வேண்டும்.
அவ்வாறு அதை நாம் செய்யத் தவறுவோமானால் எமது பின் சந்ததியினரை வரலாறு தெரியாதவர்களாக ஏனைய சமூகத்தின் வரலாறுகளை பார்த்து ஆச்சரியம் கொள்ளவேண்டிய நிலை எமது பரம்பரைகளுக்கு ஏற்படக்கூடும்.
மகிழடித்தீவு சிவநெறிக்கழகத்தின் முய ற்சியால் இன்று மகிழடித்தீவு ஆலயங்க ளின் வரலாறு ஆவணப்படுத்தப்படுவது போல் ஏனைய கிராம அமைப்புகளும் இதுபோன்ற பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
கலைஞர்கள் படைப்பாளிகள் எமது போர்க் கால உண்மைகளை இலக்கியங்களாக படைப்பதற்கு பின் நிற்போமானால் நாம் படைப்பாளிகளாக இருப்பதற்கு அருகதையற்றவர்கள் எனவும் மேலும் கூறினார்.